/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மகசூல் அள்ளித் தரும் பருத்தி, மல்லி, பாகல்
/
மகசூல் அள்ளித் தரும் பருத்தி, மல்லி, பாகல்
PUBLISHED ON : மே 02, 2018

தக்காளி, மிளகாய் விலை குறைந்து விவசாயிகள் பறிக்காமல் விடும் நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அதிகம் பேர் ஒரே நேரத்தில் ஒரே விதமாக பயிர் செய்வது தான். இம்முறையை நிறுத்த வேண்டும். பருத்தி, குண்டுமல்லி, சிறு பாகற்காய் ஆகிய பயிர்கள் ஆண்டு முழுவதும் நல்ல பயன் தரும்.
வெள்ளை தங்கம்: தென் மாவட்டங்களில் பருத்தியை வெள்ளை தங்கம் என்பார்கள். இதில் புதிய தொழில் நுட்பங்களை பகுத்தி லாபம் பெறலாம். செடியில் வளரும் நுனிகளை கிள்ளிவிட வேண்டும். பின் அதிகாரிகள் கூறும் மருந்தை அடித்தால் காய்கள் அதிகம் பிடிக்கும். காய் புழுக்களை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தலாம். கரிசல் மண்ணில் பருத்தி நன்கு வளரும். தேவையான மணல், செம்மண், உரம், தழைச்சத்து சேர்த்தால் நல்ல பயன் தரும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பருத்தி பயிரிடலாம்.
குண்டு மல்லி: மல்லிகை பூவிற்கு நல்ல விலை கிடைக்கிறது. செம்மண், கரிசல் மண்ணில் நன்கு வளரும். நல்ல வடிகால் வசதி வேண்டும். ஏக்கருக்கு 2,000 செடிகள் வரை நடலாம். முதல் மாதம் முதல் ஒவ்வொரு செடிக்கும் 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 25 கிராம் கடலை புண்ணாக்கு, இயற்கை உரம் வைக்கலாம். ஏழாம் மாதம் புண்ணாக்கு வைப்பதை நிறுத்த வேண்டும். மருந்து அடித்து இலைப்பேனை கட்டுப்படுத்தலாம். சொட்டு நீர் முறையில் நன்கு வளரும். பேன் கட்டுப்படும். உப்பு நீரிலும் வளரும்.
சிறு பாகற்காய்: நீரிழிவு நோய்க்கு மருந்தாவதால் நல்ல விலை ஆண்டு முழுவதும் கிடைக்கும். கிலோ 40 ரூபாய் வரை விலை போகும். ஊடு பயிராக நல்ல உயர பந்தல் அமைத்து வளர்க்கலாம். இதர காய்கறி பயிர்கள் போடும் பொழுதே இதையும் போடலாம். ஆண்டு முழுவதும் நன்கு காய்க்கும், நீடித்த நிலைத்த விவசாயமாக இதை செய்து வர நல்ல லாபம் கிடைக்கும்.
தொடர்புக்கு 95662 53929.
- எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர், சென்னை

