/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
விவசாயிகள் வரவு பெருக வியாபாரியாக மாறும் வழி
/
விவசாயிகள் வரவு பெருக வியாபாரியாக மாறும் வழி
PUBLISHED ON : அக் 09, 2019

விலைவாசி குறித்து விவசாயிகள் அறிந்த ஒன்று தான். தனது வேளாண் பொருளை தெரிந்தோ, தெரியாமலோ பிறரிடம் கொடுத்து பணம் பெற்றிருப்பர். சில நேரம் பொருளை முன்னதாக தந்து பிறகு அடுத்த நாள் அதன் தொகையை மண்டி வைத்துள்ள நபர்களிடம் பெறுவர். இந்த பரிவர்த்தனை முறை எளிதானது. அன்றாடம் நிகழும் இந்த வரவுக்கு ஆதார அங்காடி வியாபாரத்தில் பல நேரம் விவசாயிகள் அதிக எரிச்சலும், பொறாமையும் கொண்டு கொந்தளித்து கூறுவது, 'எனது தக்காளியை ரூ.10க்கு வாங்கி அதை நுகர்வோரிடம் ரூ.20க்கு விற்கிறார்கள். எனக்கு உரிய விலை கிடைக்காமல் வருந்துகிறேன். நித்தம் பாடுபட்டு எனக்கு பணமே வரவில்லை,' என நொந்து கொள்வது அவரின் அறியாமையின் வெளிப்பாடு என்றே கூறலாம்.
எந்த ஒரு பொருளுக்கும் மொத்த கொள்முதல் விலை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். அதாவது ஒரு நாற்காலி வாங்கினால் ரூ.800 ஆகும். மொத்தமாக 100 நாற்காலிகள் வாங்கினால் ஒரு நாற்காலியின் விலை ரூ.600 என விலை நிர்ணயிப்பர். இதற்காக எந்த தயாரிப்பாளரும் புலம்புவதில்லை. உயிரற்ற எந்த பொருளுக்கும் அடக்கவிலை என்று ஒன்றும், விற்பனை விலை ஒன்றும் உண்டு. விவசாயத்தில் மட்டும் தான் அடக்கவில்லை விலை கிடையாது. ஆனால் உற்பத்தி செலவுக்கும் மதிப்பளித்து விற்பனை விலை பொருந்தி பொருளை விநியோகம் செய்வது தான் விவசாயிகளுக்கு உதவும். சில நேரங்களில் அதிக பரப்பில் சாகுபடி செய்பவர் விலையை குறைத்து சிறு உற்பத்தியாளர்களை சிறிய லாபம் அடையக்கூட விடுவதில்லை. எனவே, சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைந்து அங்காடி முறையில் விற்பனை செய்தால் லாபம் ஈட்ட முடியும்.
- பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர், தேனி.
98420 07125

