தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/பயிரும் பருவங்களும்

பயிரும் பருவங்களும்

பயிரும் பருவங்களும்


PUBLISHED ON : பிப் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விவசாயத்தைப் பொறுத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்தது. அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது முக்கியம்.

ஆடிப்பட்டத்தில் அனைத்து தானியப் பயிர்களும் பெரும்பாலான காய்கறிப் பயிர்களும் சாகுபடி செய்யப்படும். தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்வது நல்லது. முந்தைய பயிரின் கழிவுகள் மாற்றுப் பயிர்களுக்கு எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் புதியப்பயிர்களை அதிகம் தாக்குவது இல்லை.

பயிரும் பருவங்களும் ஜனவரியில் (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகற்காய், தக்காளி, பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, கீரைகள், வெங்காயம், அவரை, கொத்தவரை, கரும்பு பயிரிடலாம். பிப்ரவரியில் காய்கறிகளுடன் கோவைக்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், பருத்தி பயிரிடலாம். மார்ச்சில் வெண்டை, பாகற்காய், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கங்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், பருத்தி பயிரிடலாம். ஏப்ரலில் செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், அவரை, எள், கம்பு, நாட்டுச்சோளமும் மே மாதத்தில் செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை, வெங்காயம், அவரை, எள், நாட்டுச்சோளம் பயிரிடலாம்.

ஜூனில் காய்கறி பயிர்களுடன் தென்னை, ஜூலையில் காய்கறி பயிர்கள், உளுந்து, தென்னை, தட்டைப்பயறு, துவரை, மொச்சை, பாசிப்பயறு பயிரிடலாம்.

ஆகஸ்டில் முள்ளங்கி, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டையும், சுரைக்காய், அவரை, மிளகாய், பாசிப்பயறு, துவரை, மொச்சை, செப்டம்பரில் காய்கறி, மிளகாய், நெல், பருத்தி பயிரிடலாம்.

அக்டோபரில் முள்ளங்கி, வெங்காயம், கொத்தவரை, சுண்டல், நெல், பருத்தியும் நவம்பரில் சூரியகாந்தி, சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளிக் கிழங்கும், டிசம்பரில் காய்கறி, நெல், நாட்டுச் சோளம், தென்னை, வாழை, மரவள்ளி பயிரிடலாம்.

விவசாயிகள் எந்த வகையான பயிர் சாகுபடி செய்ய திட்டமிட்டாலும் விதைப்பதற்கு முன்பாக விதைப்பரிசோதனை செய்வது அவசியம். விதைகள் சரியான முளைப்புத்திறன் அளவில் இருந்தால் தான் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும்.

விதை மாதிரிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் ரூ.80 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்யலாம்.

-சிவகாமி, விதைப்பரிசோதனை அலுவலர் ராமலட்சுமி, கமலாராணி, வேளாண் அலுவலர்கள் விதைப்பரிசோதனை நிலையம் நாகமலை புதுக்கோட்டை, மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us