/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக விளைச்சலுக்கு கேக் ஜாம் பழம் சாகுபடி
/
அதிக விளைச்சலுக்கு கேக் ஜாம் பழம் சாகுபடி
PUBLISHED ON : மே 07, 2025

கேக் ஜாம் பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், கேக் ஜாம் பழம் சாகுபடி செய்யலாம்.
இது, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில் சாகுபடி செய்யலாம். எல்லா சீதோஷ்ண நிலையிலும் வளரும் தன்மை கொண்டது.
குறிப்பாக, நம்மூர் நாவல் பழங்களை போல கொத்து கொத்தாக காய்க்கும் தன்மையாக உள்ளது. நாவல் பழம் கோலி குண்டு போல இருக்கும். இந்த கேக் ஜாம் பழம் குட்டி குட்டியாக இருக்கும்.
இந்த பழம், சர்க்கரை நோயாளிக்கு உகந்தவையாக உள்ளது. இந்த மரத்தின் இலை, பட்டை, விதை உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400.