/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
இரட்டிப்பு வருவாய்க்கு கொத்தவரங்காய் சாகுபடி
/
இரட்டிப்பு வருவாய்க்கு கொத்தவரங்காய் சாகுபடி
PUBLISHED ON : ஜூலை 09, 2025

களிமண் நிலத்தில், கொத்தவரங்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், தாங்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி.மோகன் கூறியதாவது:
களிமண் நிலத்தில், நெல் மற்றும் காய்கறி ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். இதில், 10 சென்ட் நிலத்தில், பாத்தி முறையில் கொத்தவரங்காய் சாகுபடி செய்துள்ளேன். நம்மூர் களிமண்ணுக்கு, செடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர்கிறது. பெயருக்கு ஏற்ப, கொத்தவரங்காய் செடிகளில், காய்கள் கொத்து கொத்தாக காய்கின்றன.
கொத்தவரங்காய் சாகுபடியை பொறுத்தவரையில், ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் இடையே புல் வளராமல் தடுத்தால், 60 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் என, காய்கறிகளை தொடர்ந்து அறுவடை செய்து கொள்ளலாம். அந்த அளவிற்கு மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும். ௧ ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடும் வருவாய்க்கு ஏற்ப, கொத்தவரங்காய் சாகுபடியில், இரட்டிப்பு வருவாய் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -ஜி.மோகன், 90472 90534.