/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
குட்டை ரக புடலங்காய் பந்தல் அமைத்து சாகுபடி
/
குட்டை ரக புடலங்காய் பந்தல் அமைத்து சாகுபடி
PUBLISHED ON : மே 28, 2025

குட்டை ரக புடலங்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், மேல்துாளி கிராமத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப கல்வி படித்த விவசாயி கே.பிரசாந்த் கூறியதாவது:
செம்மண் கலந்த சவுடு மண்ணில், பல்வேறு விதமான காய்கறி, வேர்க்கடலை உள்ளிட்ட விளைப்பொருட்கள் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், குறைந்த நிலப்பரப்பில், பந்தல் அமைத்து குட்டை ரக புடலங்காய் சாகுபடி செய்துள்ளேன்.
இந்த வெள்ளை நிற குட்டை ரக புடலங்காய் அதிக சதை பற்றுடன் இருக்கும். இதை, கூட்டு, காரக்குழம்பு மற்றும் இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்தலாம்.
முறையாக பராமரித்தால், நீள ரக புடலங்காய் காட்டிலும், இந்த குட்டை ரக புடலங்காயில் அதிக மகசூல் பெறலாம். குட்டை ரக புடலங்காய்க்கு சந்தையில் எப்போதும் வரவேற்பு இருப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.பிரசாந்த்,
63691 87589.