sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

தரிசுநிலத்தில் புளி சாகுபடி

/

தரிசுநிலத்தில் புளி சாகுபடி

தரிசுநிலத்தில் புளி சாகுபடி

தரிசுநிலத்தில் புளி சாகுபடி


PUBLISHED ON : மார் 09, 2011

Google News

PUBLISHED ON : மார் 09, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசு தரிசுநில மேம்பாட்டிற்கு நல்லதிட்டங்களை வகுத்திருக்கிறது. விளையாத தரிசு நிலங்களில் வளத்திற்கேற்ப திட்டங்களை நிறைவேற்ற பலரும் முன்வர வேண்டும். இதன்மூலம்தான் விவசாயம் ஒரு வளமான உயர் தொழில் என்று நாடே உணரும்.

ரகங்கள்: பிகேஎம்1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர் மண் மற்றும் தட்பவெப்பநிலை: மணல் கலந்த மண் இதன் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும். சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ. வரை போதுமானது. மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும்.

பருவம்: ஜூன் - டிசம்பர் இனப்பெருக்கம்: விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல்

இடைவெளி: 8-10 து 8-10 மீ.

நடவு: 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளில் மத்தியில் செடிகளை நடவேண்டும். ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் லிண்டேன் மருந்து 50 கிராம் தூவ வேண்டும். செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றி கட்டிவிட வேண்டும்.

நீர்ப்பாசனம்: கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை: நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில்தான் நல்ல மகசூல் கிடைக்கும். பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.

மகசூல்: ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ. இதன் அடிப்படையில் தரிசு நிலத்தில் புளி சாகுபடி ஒரு லாபகரமான தொழிலாகும்.

தொடர்புக்கு: எம்.அகமது கபீர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் போஸ்ட், தாராபுரம்-638 657.
-எம்.அகமது கபீர்,
வேளாண்மை ஆலோசகர்,
அக்ரி கிளினிக், தாராபுரம். 93607 48542.






      Dinamalar
      Follow us