/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நோய் தாக்குதல் இல்லாத நெல்லையப்பர் ரக நெல்
/
நோய் தாக்குதல் இல்லாத நெல்லையப்பர் ரக நெல்
PUBLISHED ON : ஆக 07, 2024

சவுடு மண் நிலத்தில், நெல்லையப்பர் ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:
பாரம்பரிய ரக நெல் சாகுபடியில், நெல்லையப்பர் ரக நெல்லும் ஒன்றாகும். இது, நடுத்தர சன்ன ரகம். நடவு செய்து, 115 நாட்களில் நெல் அறுவடைக்கு வரும்.
திருநெல்வேலி மாவட்டத்தில், அதிகமாக சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய ரக நெல்லில் இது ஒன்றாகும். நம்மூர் சவுடு மண்ணில் சாகுபடி செய்துள்ளேன்.
இந்த ரக நெல், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய அனைத்து விதமான பருவங்களிலும் சாகுபடி செய்யலாம். அனைத்து விதமான சீதோஷ்ண நிலையை தாங்கி வளரக்கூடியது.
இந்த ரக நெல், மஞ்சள் நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும். பொதுவாக, நெல்லையப்பர் ரக நெல்லில், நோய், பூச்சி தாக்குதல் இருக்காது.
இந்த அரிசியில், நோய் எதிர்ப்பு திறன் அதிகம் இருப்பதால், சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்,
96551 56968.