/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கூடுதல் மகசூலுக்கு உகந்தது டி.பி.ஜி.எஸ்-., 1,694 ரக வேர்க்கடலை
/
கூடுதல் மகசூலுக்கு உகந்தது டி.பி.ஜி.எஸ்-., 1,694 ரக வேர்க்கடலை
கூடுதல் மகசூலுக்கு உகந்தது டி.பி.ஜி.எஸ்-., 1,694 ரக வேர்க்கடலை
கூடுதல் மகசூலுக்கு உகந்தது டி.பி.ஜி.எஸ்-., 1,694 ரக வேர்க்கடலை
PUBLISHED ON : செப் 25, 2024
டி.பி.ஜி.எஸ்.,- 1,694 ரக வேர்க்கடலை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
பாரம்பரிய ரக காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.
அந்த வரிசையில், டி.பி.ஜி.எஸ்-., ரக வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளேன். இது, 115 நாளில் அறுவடை செய்யலாம். இந்த ரகத்தில், நோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை.
நீர் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நிர்வாகத்தை முறையாக கையாண்டால், ஒரு ஏக்கருக்கு, 30 மூட்டை வரையில் மகசூல் பெறலாம்.
இது, பிற ரக வேர்க்கடலை காட்டிலும், 10 மூட்டைகள் கூடுதல் மகசூல் எடுக்க முடியும். இந்த ரகத்தில், எண்ணெய் உற்பத்திக்கு ஏற்ற ரகம் என, கூறலாம். குறிப்பாக, கார்த்திகை மற்றும் சித்திரை ஆகிய இரு பருவங்களில் சாகுபடிக்கு உகந்த ரகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- பி.குகன், 94444 74428.