/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சொட்டுநீர் பாசனம் மூலம் செடிமுருங்கை வெற்றிக்கதை
/
சொட்டுநீர் பாசனம் மூலம் செடிமுருங்கை வெற்றிக்கதை
PUBLISHED ON : ஜூலை 24, 2013

காளிமுத்து, விவசாயி: தாராபுரம் தாலுகா, ஊத்துப்பாளையம் கிராமம் சர்வே எண்.78/1 மற்றும்82/2ல் எனக்கு சொந்தமான 1.61.0 ஹெக்டேர் நிலத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை தாராபுரம் அலுவலகத்தின் மூலம் அரசு மானியத்தில் (75 சதவீதம்) முருங்கை பயிருக்கு சொட்டுநீர்ப்பாசனம் அமைத்துள்ளேன்.
மிகவும் வறட்சியான நிலையில் எனக்கு சொந்தமான 600 அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து கம்ப்ரசர் மூலம் சுமார் 4 மணி நேரம் தண்ணீரை எனக்கு சொந்தமான திறந்தவெளி கிணற்றில் சேமித்து, கிணற்றிலுள்ள 5எச்.பி. மோட்டார் மூலம் சேமிக்கப்பட்ட நீரைக்கொண்டு சுமார் 2 மணி நேரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் முருங்கை பயிருக்கு ஒரே நேரத்தில் 1.61.0 ஹெக்டேர் பரப்புக்கு பாசனம் செய்து சுமார் 4000 முருங்கை மரங்களை இந்த வறட்சியான காலத்திலும் நல்ல முறையில் பயிர் செய்து வருகிறேன்.
வாய்க்கால் பாசனம் மூலம் சுமார் 1 ஏக்கர் மட்டுமே பாயும் என்ற நிலையில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 4.00 ஏக்கர் முருங்கை பயிரிட்டு நல்ல முறையில் பாசனம் செய்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு ஆண்டுக்கு சுமார் 40.00 டன் வகை மகசூல் கிடைக்கும் என்பதால் எனக்கு கூடுதலாக ரூ.3.00 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் எனவும் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் இது சாத்தியமாகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
(தகவல்: தி.யுவராஜா தட்சிணாமூர்த்தி, உதவி பொறியாளர் (வே.பொ), தாராபுரம், 96591 08780)
-கே.சத்தியபிரபா, உடுமலை.

