sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

100 நாளில் ரூ.20 ஆயிரம் வருவாய் - எள் உற்பத்தியில் சாதித்த விவசாயி

/

100 நாளில் ரூ.20 ஆயிரம் வருவாய் - எள் உற்பத்தியில் சாதித்த விவசாயி

100 நாளில் ரூ.20 ஆயிரம் வருவாய் - எள் உற்பத்தியில் சாதித்த விவசாயி

100 நாளில் ரூ.20 ஆயிரம் வருவாய் - எள் உற்பத்தியில் சாதித்த விவசாயி


PUBLISHED ON : ஜூலை 16, 2014

Google News

PUBLISHED ON : ஜூலை 16, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்மாயில் தண்ணீர் இல்லாத போதும், ராஜபாளையம் விவசாயி ஒருவர் எள் பயிரிட்டு, 100 நாட்களில் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து சாதித்து உள்ளார் .

கடந்த இருஆண்டுகளாக ராஜபாளையத்தில் பருவமழை பெய்யாததால், விவசாயிகள் பலவிதத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தென்னை விவசாயிகள், மரங்களை வெட்டி, மா விவசாயத்திற்கு மாறுகின்றனர். மா விவசாயத்திலும் கடந்த ஆண்டை போல வருமானம் இல்லை. கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால், நெல் விவசாயமும் பாதித்தது. இதையெல்லாம் கணக்கிட்டு, எள் விவசாயத்தில் இறங்கி சாதித்து உள்ளார் விவசாயி மதுரை பாண்டி.

ராஜபாளையம் பிரண்டைகுளம் கண்மாயில், 120 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடந்த நிலையில், தண்ணீர் இல்லாததால் பலர் காய்கறி, கீரை போன்ற விவசாயம் செய்து வந்தனர். வரவுக்கு மேல் செலவு இருந்தது. கண்மாய் பாசன நிலத்தில், விவசாயி மதுரை பாண்டி கடந்த மார்ச்சில் எள் விதைத்தார். இரு மாதங்களுக்கு முன் திடீரென மழை பெய்தது.இது, எள் செடி வளர்ச்சிக்கு உதவியது.

அண்மையில் அறுவடை செய்து, தண்ணீர் இல்லாத கண்மாயின் ஓரத்தில் களம் அமைத்து, செடிகளை அடித்து எள்ளை சேமித்தார். 100 கிலோ உள்ள எள் மூடை ஏழு ஆயிரம் ரூபாய்க்கு, வியாபாரிகளுக்கு விற்றார்.

மதுரை பாண்டி கூறுகையில், ''எள் நடுவதால் களை எடுப்பு, இதர கூலி வேலைகளுக்கு

அதிக ஆள்கள் தேவை இல்லை. விதைத்த நூறு நாளில் அறுவடை செய்யலாம். மாசியில் விதைத்து வைகாசியில் அறுவடை செய்தால் எள் கிடைக்கும். எண்ணெய் மில்கள் அதிகமாகி வருவதால், எள் விவசாயத்திற்கு வரவேற்பு உள்ளது. இந்த முறை ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு மூடை எள் கிடைத்தது, செலவு போக 20 ஆயிரம் ரூபாய் கையிருப்பு உள்ளது,'' என்றார்.

-கற்பகநாதன், ராஜபாளையம்






      Dinamalar
      Follow us