/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சுற்றுச்சூழல் மேம்பாட்டு முயற்சி - 'விதைப்பந்து' தயாரிக்கும் அவிநாசி இளைஞர்

PUBLISHED ON : ஜூலை 10, 2019

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் ராமசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக விதைப்பந்துகளை உற்பத்தி செய்து திருமணம், பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொள்ளும் உறவினர்களுக்கு நினைவு பரிசாக தரும் வகையில் ஒரு சிறிய பரிசு பெட்டியில் ஆறு எண்ணிக்கை கொண்ட விதைப்பந்துகளை வைத்து குறைந்த விலையான 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். மேலும் அரசு, தனியார், வணிக நிறுவனங்கள் பயன் பெறும் வகையிலும் விதைப்பந்து பெட்டிகளை வழங்கி வருகிறார்.
அவர் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் விதைப்பந்துகளை தமிழகம் முழுவதும் அனுப்பியுள்ளேன். தற்சமயம் தினமும் பத்தாயிரம் விதைப்பந்துகளை உற்பத்தி செய்கிறேன்.
விதைப்பந்து என்பது இரண்டு வகை மண் மற்றும் சாண எரு கலந்து, அந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பது தான். விதைப்பந்துகளுக்கு மழைநீர் கிடைத்து வளரும் வரை விதைகளும் பாதுகாப்பாக இருக்கும்.
விதைப்பந்துகளில் வேம்பு, பூவரசு, புங்கன், வாகை, சரகொன்றை, ஆல், அரசு, அத்தி, மகாகனி, சந்தனம், புளியன், மயில்கொன்றை, குமிழ் போன்ற விதைகளை பயன்படுத்துகிறேன். இதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு காண முடியும்.
10 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது, என்றார்.
தொடர்புக்கு : 95009 14545