/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கூடுதல் மகசூல் தரும் உருளை வடிவ சப்போட்டா
/
கூடுதல் மகசூல் தரும் உருளை வடிவ சப்போட்டா
PUBLISHED ON : செப் 04, 2024

உருளை வடிவ சப்போட்டா சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காந்துார் கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை பொறியியல் பட்டதாரி விவசாயி எம்.வாசுதேவன் கூறியதாவது:
சவுடு மண் நிலத்தில், ரசாயன உரங்கள் பயன்பாடு இன்றி, இயற்கை உரங்களை பயன்படுத்தி உளுந்து, வேர்க்கடலை, மாம்பழம், சப்போட்டா ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், உருளை வடிவ சப்போட்டா சாகுபடி செய்துள்ளேன். இது, சீசன் மற்றும் சீசன் இல்லாத நேரங்களிலும் விளைச்சல் கொடுக்கிறது.
இதற்கு, இயற்கை உரத்தை நீர் பாசனத்துடன் சேர்த்து விடுவதால், உரம் நிர்வாகத்தை எளிதாக கையாள முடிகிறது. அதற்கு ஏற்ப மகசூலும் பெற முடிகிறது.குறிப்பாக, மா, சப்போட்டா ஆகிய பழச்செடிகளுக்கு நடுவே, பெட்டியில் தேனீ வளர்ப்பதால், பழச்செடிகளில் பூக்கள் பூக்கும் போது, மகரந்த சேர்க்கை அதிகரித்து, கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.வாசுதேவன், 95974 60346.