/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பண்ணை கழிவு நீரில் தீவனம் வளர்க்கலாம்
/
பண்ணை கழிவு நீரில் தீவனம் வளர்க்கலாம்
PUBLISHED ON : டிச 28, 2022

பண்ணை கழிவு நீரில், பல வித தீவனங்களை சாகுபடி செய்யும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கார்த்திகேயபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்., பண்ணை உரிமையாளர் எஸ்.ரமேஷ் கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான பண்ணையில், தரமான வாத்து மற்றும் பெருவிடை கோழிகள் மூலமாக கிடைக்கும் முட்டைகளை நவீன குஞ்சுகள் பொறிக்கும் இயந்திரத்தின் மூலமாக, கோழிக் குஞ்சுகள் மற்றும் வாத்துக் குஞ்சுகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறோம்.
இந்த பண்ணையில் இருந்து வெளியேறும் கோழி, வாத்து, ஆடுகளின் எச்ச கழிவு நீரை, ஒரு தொட்டியில் சேமிக்கிறோம். அந்த கழிவு நீரை வடிகட்டி, சொட்டு நீர் பாசன கருவிகள் மூலமாக, 'மல்பெரி', அகத்திக் கீரை, வேலிமசால் உள்ளிட்ட பலவித தீவன செடிகளை வளர்த்து வருகிறேன்.
இந்த பலவித தீவன செடிகளுக்கு, ஆடு, கோழி, வாத்து ஆகியவைகளின் சாணங்களை மக்கவைத்து உரமாக போட்டு வருகிறோம். இதன் மூலமாக, செலவு இன்றி தீவனம் உற்பத்திக்கு வழி வகுக்கிறது. இது, ஒருங்கிணைந்த பண்ணையத்திற்கு சவுகரியமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
-எஸ்.ரமேஷ்.
86102 45808

