sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை

/

ஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை

ஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை

ஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை


PUBLISHED ON : ஜூன் 05, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 05, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முறையான இயற்கை உரம் தந்து மரமுருங்கையை பராமரித்தால், தென்னையை விட கூடுதலாக, 50 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும். இயற்கை உரம் தந்து, காய், கீரைகளை பெறுவதோடு, முருங்கைக் கன்றுகள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறார், திண்டுக்கல் பள்ளப்பட்டியைச் சேர்ந்த முருங்கை விவசாயி கே.பி.எம்.சடையாண்டி.

''ரசாயன உரத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை. மண்புழு உரமும், பஞ்சகாவியம், இயற்கை பூச்சிகொல்லிகள்தான் மண்ணை பொன்னாக்கும். நல்ல காய்ப்புத் திறன் உள்ள மரத்தில்தான் 'விண் பதியம்' முறையில், கன்றுகள் உற்பத்தி செய்கிறேன். விதைகள் மூலம் வளர்த்தால், காய்ப்புக்கு இரண்டு ஆண்டுகளாகும். சாதாரண பதியன் முறையில், கன்றுகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும். 'விண் பதியம்' முறையில், உயிர்வாழும் திறன் அதிகமாக இருக்கும்.

வளர்ந்த மரத்தில் சிறுகத்தியால் தண்டுப்பகுதியின் மேற்தோலை வட்ட வடிவமாக வெட்டியெடுக்க வேண்டும். அந்த இடத்தில் தென்னை நார்க்கழிவு, நுண்ணுயிர், பஞ்சகாவியம் கலந்து 40 சதவீத ஈரப்பதத்துடன் பாலித்தீன் பேப்பரை வைத்து நூலால் இருபுறமும் இறுக்கி கட்ட வேண்டும். 30 நாட்களில் வேர் விட்டிருப்பது பாலித்தீன் பேப்பர் வழியாக வெளியே தெரியும். அதிலிருந்து சற்றே கீழ் பகுதி வரை வெட்டியெடுக்க வேண்டும்.

இதை தனியாக சிறுபைகளில் ஒரு மாதம் வரை வளர்க்க வேண்டும். இந்த கன்றுகள் ரூ.30க்கு கிடைக்கிறது. முருங்கையை ஒடித்து வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நீண்டு உயர்ந்து வீணாகிவிடும். கன்றை பூமியில் நட்ட 40வது நாளில் நுனிக் கிளைகளை கிள்ளி விட வேண்டும். சிம்புகள் அதிகம் வெடிக்கும். அடுத்தடுத்து ஒரு மாத இடைவெளியில் இரண்டு முறை கிளைகளை வெட்டினால், 30 சிம்புகள் வரை படர்ந்துவிடும். அதன்பின் பூப்பிடிக்கும். கிளைகளை வெட்ட வேண்டியதில்லை.

கன்றை நட்ட ஆறாவது மாதத்தில் பூப்பிடிக்கும். எட்டாவது மாதத்தில் காய்க்கும். நோய் தாக்குதல் இருக்காது. வெறும் வேப்பஎண்ணெய், பஞ்சகாவ்யம் கொடுத்தால் போதும். முதல் பருவத்தில் மரத்திற்கு 50 கிலோவும், இரண்டு மாத இடை வெளியில் மூன்று காய்ப்பில் மொத்தம் 200 கிலோ கிடைக்கும். ஏழு ஏக்கரில் முருங்கை நடவு செய்துள்ளேன்.

சீசன் இல்லாத நேரத்தை கணக்கிட்டு, கன்று உற்பத்தி செய்யும் போது, காய்ப்பும் அந்தநேரத்தில் கிடைக்கும். மற்றநேரங்களில் எல்லா இடங்களில் இருந்தும் முருங்கைக்காய் வரத்து கிடைக்கும். சீசன் இல்லாத நேரங்களில் காய்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். நமக்கும் நல்ல லாபம் வரும்.

நான்கு மாதத்திற்கு ஒருமுறை மண்புழு உரமும், ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டுக்கிடை மூலம் புழுக்கையும் உரமாக தருகிறேன். முறையாக கோடை உழவு செய்வேன். களைகளை சுத்தமாக வெட்டி எடுப்பதால், வெளியிலிருந்து புழுக்கள் மண்ணில் விழுவது குறையும். இந்த ரகம் எங்கிருந்தோ வந்தது அல்ல. மதுரை பாலமேடு வலையபட்டி மர முருங்கை ரகம் தான். செடி முருங்கையை விட கீரை, காய்கள் மிக சுவையாக இருக்கும், என்றார்.

தொடர்புக்கு: 97913 74087.






      Dinamalar
      Follow us