PUBLISHED ON : பிப் 28, 2018

துாத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் விவசாயிகளுக்கான பல்வேறு இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது. விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம் வருவாய் ஈட்டும் வகையில் பசுமைக்குடில், கால்நடை பராமரிப்பு, வருமானம் தரும் காய்கறிகள், சொட்டுநீர் பாசனம், உழவர் கூட்டமைப்பு, உரமிடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் மாதம் தோறும் வேளாண் பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள், பண்ணை தொழில்நுட்ப வல்லுனர்களால் பகுதி பகுதியாக தலா மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பின் தொழில்நுட்ப ஆலோசனைகள், மானியம், விவசாய கடன் பெறுதல் உள்ளிட்ட சேவைகளை அளிக்கின்றனர்.
வரும் மார்ச் 6,7,8 மற்றும் 14,15,16 மற்றும் 27,28,29 ஆகிய நாட்களில் துல்லிய பண்ணையம், சொட்டுநீர், மண் வளம், நபார்டு வங்கி திட்டங்கள், காய்கறி பயிரிடுதல், பயிர் பாதுகாப்பு குறித்து பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் பங்கு பெறலாம். உணவு, தங்குமிடம், பயிற்சிக்கான போக்குவரத்து செலவு இலவசம். பெண் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். குழந்தைகளை அழைத்து வரக்கூடாது.
பயிற்சியில் சேர விரும்புவோர் 83000 26073 ல் தொடர்பு கொள்ளலாம்.
- ஆர்.செல்வகணபதி
வேளாண் பிரிவு நிர்வாகி, ஸ்பிக்.

