/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கரும்பு குழி நடவுக்கு முழு மானியம்
/
கரும்பு குழி நடவுக்கு முழு மானியம்
PUBLISHED ON : அக் 23, 2013
திருந்திய கரும்பு சாகுபடி திட்டத்தில், சொட்டுநீர் பாசனம் மற்றும் குழி நடவு மூலம் கரும்பு நடவு செய்பவர்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என உதவி வேளாண் இயக்குனர் லட்சுமணன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: நவம்பரில் முதற்கட்ட நடவு பருவம் என்பதால், கரும்பு நடவு செய்ய விரும்பும் விவசாயிகள், கரும்பின் ஒரு பரு மூலம் நாற்றங்கால் அமைத்து, குழி நடவு செய்து, சொட்டு நீர் பாய்ச்சி விவசாயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் மானிய தொகையும், நீரில் கரையும் தேவையான உரங்களும் இலவசமாக வழங்கப்படும். மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் வேளாண் அலுவலகத்தில் மேலும் விபரங்களை அறியலாம், என்றார். உதவி அலுவலர் ஸ்ரீதர் உடனிருந்தார்.

