தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/தானியங்களுக்கு ஈரப்பதம் தேவை

தானியங்களுக்கு ஈரப்பதம் தேவை

தானியங்களுக்கு ஈரப்பதம் தேவை


PUBLISHED ON : நவ 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறுவடை செய்யப்பட்ட தானியங்களை உரிய ஈரப்பதத்தில் சேமித்து வைப்பது அவசியம்.

விதை ஈர்த்து வைத்துள்ள தண்ணீரின் அளவே விதை ஈரப்பதம் எனப்படுகிறது. ஈரப்பதத்தை சதவீதத்தில் குறிப்பிடுகிறோம். விதையின் முளைப்புத்திறன், விதை கெடுதல், பூச்சித் தாக்குதல் மற்றும் அதிகபட்ச சேமிப்பு காலம் ஆகியவற்றை விதையின் ஈரப்பதம் நிர்ணயம் செய்கிறது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் முளைப்புத்திறனும் சேமிப்புக்கான கால அளவும் குறையும்.

பூஞ்சாணம் மற்றும் பூச்சித் தாக்குதலால் பாதிப்பு ஏற்படும். எனவே விதையின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் சேமித்து வைக்கவேண்டும். விதையின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது விதைத்தரத்தை முடிவு செய்யும் முக்கிய காரணியான விதை முளைப்புத்திறன் குறையும்.

ஈரப்பதம் பயிர்களுக்கு மாறுபடும்

நெற்பயிருக்கு 13 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். சிறுதானியங்களுக்கு 12 சதவீதம், பயறு வகைகள், நிலக்கடலை, சூரியகாந்தி, எள் பயிர்களுக்கு 9 சதவீதம், பருத்திக்கு 10 சதவீத ஈரப்பதமானது விதைப் பயன்பாட்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆவணி மற்றும் புரட்டாசி பட்டங்களில் விதைப்பு செய்யப்பட்ட சோளம், குதிரைவாலி, பாசி, உளுந்து பயிர்களின் அறுவடை தற்போது நடைபெறும்.

மழைச்சாரல் விழுவதால் விதையின் ஈரப்பதம் அதிகரிக்கும். நன்றாக உலர்த்தி விதையின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவிற்குள் சேமித்து வைக்க வேண்டும்.

பயிர் அறுவடையின்போது தானியங்களின் விலையானது சந்தையில் சற்று குறைவாகக் கிடைக்கும். சரியான ஈரப்பதத்தில் சேமித்து தானியத்தின் தேவை அதிகரிக்கும் போது விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கலாம்.

விதையின் ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறனை அறிந்து கொள்ள அரசு விதைப்பரிசோதனை மையங்களை விவசாயிகள் அணுகலாம். ஒரு பரிசோதனை குவியலுக்கு ரூ.8 கட்டணம் செலுத்தி விதைப் பரிசோதனை செய்யலாம்.-

மகாலட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்

ஜானகி, சாய்லட்சுமி சரண்யா,
வேளாண் அலுவலர்கள் அரசு விதைப் பரிசோதனை நிலையம்

நாகமலை புதுக்கோட்டை, மதுரை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us