/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஒரே குழியில் 5 விதமான காய்கறிகள் வளர்க்கலாம்!
/
ஒரே குழியில் 5 விதமான காய்கறிகள் வளர்க்கலாம்!
PUBLISHED ON : ஆக 14, 2019

சஞ்ஜிவம் இசைவியல் கூடை நடவு குறித்து, உத்திரமேரூர் அடுத்த, வயலக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விவசாயி, ஏ.செந்தில் கூறியதாவது:
சஞ்ஜிவம் இசைவியல் கூடை நடவு என்பது, நிலத்தில் பயிரிடப்படும் காய்கறி பயிர்களை, புல், பூண்டு மற்றும் பிற செடிகளுக்கு இடையே, அதன் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ப்பது. இசைவியல் வேளாண் முறை எனவும் கூறலாம்.
இந்த முறையில் காய்கறி பயிரிட்டால், ஒரு குழியில், ஐந்து வித காய்கறிகளை பயிரிடலாம்.
கத்தரி, மிளகாய், அவரை, தர்பூசணி, வெண்டை ஆகிய விதைகளை விதைத்து, அவற்றில் இருந்து வருவாய் ஈட்டலாம். சஞ்ஜிவம் மருந்து கலந்த நீரை தெளித்து, காய்கறிகளை அறுவடை செய்யலாம்.
ரசாயன உரங்களை போட்டு விளைவிக்கும் காய்கறிகளை விட மகசூல் குறைவு தான். இருப்பினும், மருத்துவ எண்ணெய் மற்றும் பிற பயன்பாட்டிற்கு, இந்த காய்கறி உபயோகப்படுத்தும் போது, இதன் வருவாயை கூடுதலாக்கலாம்.
ஆறு மாத முறையான பயிற்சிக்கு பின், இது போன்ற விவசாயம் மேற்கொள்வது சிறப்பு சேர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: 99655 53862

