/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஐஸ்கிரீம் பீன் பழ சாகுபடி மலை மண்ணிலும் சாத்தியம்
/
ஐஸ்கிரீம் பீன் பழ சாகுபடி மலை மண்ணிலும் சாத்தியம்
PUBLISHED ON : பிப் 05, 2025

ஐஸ்கிரீம் பீன் பழ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பயிற்சி வழக்கறிஞர்எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:
மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழ மரங்களை என் தோட்டத்தில் நட்டுள்ளேன். இதுதவிர, வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மரங்களை சாகுபடி செய்துள்ளேன்.
அந்த வரிசையில், ஐஸ்கிரீம் பீன் பழ மரங்களை சாகுபடி செய்துள்ளேன். இதை, மாடி தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களில் சாகுபடி செய்யலாம்.
இந்த பழங்கள், புளியம் பழங்களை போல் வடிவம் இருக்கும். பழத்தின் தோலை உரித்த பின், வெள்ளை நிற பழம் காணப்படும். இந்த பழத்தை மதிப்பு கூட்டி னால், வெண்ணிலா எனும் சுவை பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது. இது, வெண்ணிலாஐஸ்கிரீம் தயாரிக்க உதவுகிறது.
இது, பிற ரக பழங்களை காட்டிலும் அதிக சுவையுடன் இருக்கும். சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம். பழத்தை ருசித்த பின், மக்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் தயங்கமாட்டர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி
89402 22567