/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
இயற்கை விளைபொருட்களுக்கு சந்தையில் கூடுதல் வரவேற்பு
/
இயற்கை விளைபொருட்களுக்கு சந்தையில் கூடுதல் வரவேற்பு
இயற்கை விளைபொருட்களுக்கு சந்தையில் கூடுதல் வரவேற்பு
இயற்கை விளைபொருட்களுக்கு சந்தையில் கூடுதல் வரவேற்பு
PUBLISHED ON : ஏப் 23, 2025

இயற்கை விவசாயத்தில், ஜி- 7 ரக வேர்க்கடலை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:
செம்மண் நிலத்தில், பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், மணல் இருக்கும் நிலத்தில், ஜி- - 7 ரக வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளேன்.
இது, தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, 90 நாட்களுக்கு மேல் மகசூல் தரக்கூடியது. இதை ரசாயன உரங்கள் பயன்பாடு இன்றி, இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளேன்.
உழவையொட்டி வேர்க்கடலை விதைத்ததோடு சரி, நீர் நிர்வாகம் மட்டுமே செய்து வந்தேன். நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இன்றி, 10 மூட்டை வேர்க்கடலை மகசூல் பெற முடிந்தது. இதை எண்ணெய்யாக மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் போது, அதிக வருவாய் ஈட்ட முடியும்.
ரசாயன உரங்களை தவிர்க்கும் இயற்கை விளைபொருட்களுக்கு சந்தையில் எப்போதும் அதிக விலை கிடைக்கிறது. அதே விளைபொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் போது, அதிக வருவாய்க்கு வழி வகுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன், 96551 56968.