/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த செம்பேன் நிர்வாகம்
/
காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த செம்பேன் நிர்வாகம்
காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த செம்பேன் நிர்வாகம்
காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த செம்பேன் நிர்வாகம்
PUBLISHED ON : ஜூலை 03, 2019

காய்கறி பயிர்களை பலவகையான சாறு உறிஞ்சும் பூச்சிகள், தண்டு மற்றும் காய் துளைப்பான்கள் தாக்கினாலும் செம்பேன் எனப்படும் சிலந்தி வகையை சேர்ந்தவை கடுமைமையான பொருளளாதார சேத விளைவுககளை ஏற்படுத்துகிறது.
இச்செம்பேன்கள் காய்கறி பயிர்களளான வெண்டை, தக்காளி, கத்தரி, பூசணி குடும்பத்தை சார்ந்த காய்கறி பயிர்களையும் தாக்கி பொருளளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. சிலந்தி இனத்தை சேர்ந்த இச்செம்பேன்கள் கண்களுக்கு தெளிவாக தெரியாது. இவற்றை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும்.
செம்பேன்
இவை ஒரு மில்லி மீட்டருக்கும் சிறியதாக எட்டு கால்களை கொண்டிருக்கும். இச்சிறிய செம்பேன்களும் அதன் குஞ்சுககளும் காய்கறி பயிர்களின் இலையின் அடிப்புறத்தில் இருந்து கொண்டு அதில் உள்ள சாற்றினை உறிஞ்சி குடிக்கின்றன. இதனால் இலையின் மேல்பாகமேல்பாகம் மஞ்சள் நிறத்தில் மாறி விடும். பின் நாளடைளடைவில் இலைகலைகள் கருகி விடும். இச்சிலந்திககள் பெருக்கத்திற்கான தட்பவெப்பட்பவெப்பநிலை சீராக இருக்கும்போது அதிக அளவில் பெருகி இலையின் மேற்பரப்பிற்கும் வந்து இலைச்சாற்றினை உறிஞ்சி சேதம் விளைவிக்கிறது.
அதிக வெப்பத்தை ஒட்டி மிதமான மழைக்காலத்தில் இதன் இனப்பெருக்கமும், தாக்குதலும் அதிககமாக இருக்கும். செடிககளுக்கு இடையில் அதிக ஈரப்பதம், வெப்பம், போதிய சூரிய ஒளி, காற்றோட்டமும் இல்லாமல் இருத்தல், தோட்டத்தில் அதிக களைச் செடிகள் மண்டிக்கிடப்பது, பூச்சிக்கொல்லி மருந்துககளால் நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிவது ஆகியவை செம்பேன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கின்றன.
கட்டுப்படுத்தும் முறை
செம்பேன் எதிர்ப்புத்திறன் கொண்ட காய்கறி ரகங்களை பயிரிட வேண்டும். தேவையற்ற களைச்செடிககளை காய்கறி தோட்டங்களில் இருந்து அகற்ற வேண்டும். பாதிப்படைந்த செடியின் பாகங்களை சேகரித்து செம்பேன்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டும். தொடர்ந்து காய்கறிகளை பயிரிடாமல், பயிர் சுழற்சி முறையை பின்பற்றி காய்கறி அல்லாத, செம்பேன் தாக்காத பயிர்களை சுழற்சி முறையில் நட வேண்டும்.
தழைச்சத்து உரமான யூரியாவை அதிக அளவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். செம்பேன்கள் ஒரு இலையில் இரண்டுக்கு மிகுதியாக இருந்தால் நனையும் கந்தகம் 80 சதம் 6.25 கிராம் அல்லது புரொபனோபாஸ் 2 மி.லி அல்லது ஈத்தையான் 50 இ.சி., 2 மி.லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
புதிய மருந்துகளகளகளான ஸ்பைரோமெஸிபென் 0.75 மி.லி அல்லது பினாசக்யுரின் 2 மி.லி ஒரு லிட்டா; தண்ணீருக்கு என்ற விகிதத்தில் கலந்து தெளித்தும் செம்பேன்களை கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறையில் வீட்டுக் காய்கறி தோட்டத்தில் செம்பேன்களை கட்டுப்படுத்த 3 சதவீதம் வேப்பெண்ணெய் கரைசல் மற்றும் 5 சதவீதம் வேப்பம் பருப்புச்சாறு கரைசல் ஆகியவற்றை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
தொடர்புக்கு 94425 42476.
- முனைவா. மா. விஷ்ணுப்பிரியா
உதவி பேராசிரியர்
(பூச்சியியல் துறை)
சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி,
காரைக்குடி.

