sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

அகர்உட் அறிமுகம்

/

அகர்உட் அறிமுகம்

அகர்உட் அறிமுகம்

அகர்உட் அறிமுகம்


PUBLISHED ON : ஜூன் 15, 2011

Google News

PUBLISHED ON : ஜூன் 15, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகர் ஒரு மதிப்பு வாய்ந்த சொத்து: அகர் ஒரு வியாபார ரீதியிலான பணப்பயிர். இதன் பிறப்பிடம் இந்தியா என்றாலும் இப்பயிர் மலேசியா, தாய்லாந்து, தென்கொரியா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, மியான்மர் மற்றும் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.

பயிரிட தகுதி வாய்ந்த அமைப்பு: அகர்மரம் மேற்பகுதி விவசாயிகளின் தங்கப் பயிர். அகர் ஒரு பாதுகாப்பான சிறிய மரம். இப்பயிரை மேற்ப குதி மண்டலத்தில் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்காமல் முக்கிய பயிராக காப்பி, டீ, ஆர்கானட், கார்டமம், தென்னை மற்றும் பனை போன்றவற்றை பயிரிடுவதைப் போன்று மலையடிவாரங்களிலும் மேட்டுபாங்கான இடங்களிலும் பயிரிடலாம்.

காப்பித் தோட்டங்கள் ஒரு சிறந்த இடம்: அகர்வுட் பயிர்களை காப்பித் தோட்டங்களில் ஆரஞ்ச், சில்வர் ஓக் மற்றும் இதர நிழல் தரும் மரங்களின் ஊடே பயிரிடலாம். இப்பயிரின் இலை அமைப்பானது இயற்கையில் எளிதில் மக்கக்கூடியது. இயற்கை எருவாக பயன்படக்கூடியது. வேர் ஆழமாக பூமியில் ஊடுருவாத தன்மை கொண்டதுடன் இது ஊர்ஜிதப்படுத்துகிறது. பத்தின் இரு மடங்கு விளைச்சலை குறுகிய காலத்தில் கொடுக்கிறது.

குறைந்த முதலீடு அதிக லாபம்: அகர்வுட் பயிர் நிரந்தரமான அதிக வருவாயினை பயிரிடப்பட்ட 7வது வருடத்திலிருந்து தருகிறது. எதிர்பார்த்த வருவாய் ஒரு கிலோவிற்கு ரூ.10,000 என்றாலும் ஒரு மரத்திற்கு 50 கிலோ எடை வந்தால் ரூபாய் ஐந்து லட்சம் கிடைக்கும். வருவாய் தற்போதைய சந்தை மதிப்பினை விட குறைவு.

சந்தன மரத்தைவிட சிறந்த அகர்வுட்: முதல் தரமான அகர்வுட்டின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.30,000 மற்றும் அதன் எண்ணெயின் விலை சில்லரை சந்தையில் ஒரு கிலோவிற்கு ரூ.10 லட்சம், தேசிய அளவிலும் அகில?உலக அளவிலும் அகர்வுட் ஒரு நிலையான தேவையையும் பெரிய வியாபார மதிப்பையும் கொண்டுள்ளது.

பராமரிப்பு வேண்டாம், தொழிலாளர் கண்காணிப்பு வேண்டாம்: அகர் பயிரிடுவதற்கு பயிரிடும் விவசாயியை தவிர வேறு தொழிலாளர்கள் கண்காணிப்பு வேண்டாம். ஒருமுறை பயிரிட்டஉடன் அதனை அறுவடை செய்யும் வரை இதற்கு குறிப்பிடத்தக்க சிறப்பு கவனம் ஏதும் செலுத்த வேண்டாம். தொடர்புக்கு: கனகராஜ், செய்யூர்.

போன்: 04183-320 193, மொபைல்: 77083 98535, 95855 60318.

-கே.சத்தியபிரபா, உடுமலை.






      Dinamalar
      Follow us