/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சீதோஷண நிலையிலும் வளரும் மலேயன் ஆப்பிள்
/
சீதோஷண நிலையிலும் வளரும் மலேயன் ஆப்பிள்
PUBLISHED ON : ஏப் 16, 2025

மலேயன் ஆப்பிள் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச்சேர்ந்த விவசாய பட்டயம் படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், மலேயன் ஆப்பிள் சாகுபடி செய்யலாம்.
இது, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில் சாகுபடி செய்யலாம். எல்லா சீதோஷண நிலையிலும் வளரும் தன்மை கொண்டது.
விதை, செடிகளின் வாயிலாக மரங்களை உற்பத்தி செய்வதால், விளைச்சல் கொடுக்க நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே, மகசூல் கொடுக்க துவங்கும்.
குறிப்பாக, விளை நிலத்தில் சாகுபடி செய்யும் போது, அதிக மகசூல் கொடுக்கும். ஆப்பிள், மாவு போல மிருதுவாகவும், பன்னீர்வாசத்துடனும் இருக்கும்.
இந்த மலேயன் ரக ஆப்பிளை ருசித்த பிறகு, மக்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்க தயக்கம் காட்ட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்
98419 86400