/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வான்கோழிகளை தாக்கும் தட்டைப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
/
வான்கோழிகளை தாக்கும் தட்டைப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
வான்கோழிகளை தாக்கும் தட்டைப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
வான்கோழிகளை தாக்கும் தட்டைப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
PUBLISHED ON : ஆக 20, 2025

வான்கோழிகளை தாக்கும் தட்டைப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
வான்கோழிகளுக்கு, தட்டைப்பூச்சி தாக்குதல் ஏற்படும். அதில் பாதிக்கப் பட்ட வான்கோழிகளுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும்.
நோய் தாக்கம் அதிகமாகும் போது, இறக்கை தளர்ந்து விடும். மேலும், சளியுடன் கலந்த கழிச்சல் இருக்கும். நாளடைவில், சளி கழிச்சல் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.
இதை தவிர்க்க, 5 கிராம் ஆமணக்கு விதை, 10 கிராம் கொட்டை பாக்கு ஆகியவற்றை அ ரைத்து, அரை தேக்கரண்டி எப்சம் சால்ட் தண்ணீரில் கலந்து, வான் கோழிகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.
மேலும், வான்கோழிகளின் எச்சத்தை அகற்றிவிட்டு, சுண்ணாம்பு நீர் தெளிக்க வேண்டும். இதுபோன்று முறையாக பராமரித்தால், தட்டைப்பூச்சி தாக்குதல் கட்டுக்குள் வரும். வான்கோழிகளில் நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,
97907 53594.