/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வயல்களில் எலிகள் கட்டுப்படுத்தும் முறை
/
வயல்களில் எலிகள் கட்டுப்படுத்தும் முறை
PUBLISHED ON : மே 02, 2018

வயல்களில் எலிகள் புகுந்து பயிர்களை கடித்து சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு கணிசமான இழப்பு ஏற்படுகிறது. எலிகளை கட்டுப்படுத்தும் எளிய வழிமுறைகளை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதன்படி வரப்புகளின் உயரம், அகலத்தை குறைப்பது நலன். கலைச் செடிகள், புற்களை அகற்றினால் எலிகள் வலை அமைக்காது. வயல்களில் வளைகளை வெட்டி எலிகளை பிடித்து அழிக்கலாம்.
கிட்டி வைத்தும் எலிகளை பிடித்து அழிக்கலாம். எலி பிடிப்பதை தொழிலாக கொண்டவர்களை அணுகி எலிகளை அழிக்கலாம். நாய்கள், பூனைகளை எலி பிடிக்க பயன்படுத்த செலவு குறையும்.
ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் எலி பிடிக்க வசதி அளிக்கும் வகையில் வயல்களில் ஏக்கருக்கு பத்து இடங்களில் மட்டை குச்சிகளை 'T' வடிவில் ஊன்றி வைப்பது நல்ல பலன் தரும். எலி வளைகளில் 5 கிராம் அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகள் இரண்டு சதவிகிதம் ஆங்காங்கே வைத்து எலிகளை அழிக்கலாம்.
'புரொமோ டையோடோன்' கட்டிகளை ஒரு வளைக்கு ஒரு கட்டி என்ற அளவில் வளைக்கு அருகில் வைத்து எலிகளை அழிக்கலாம். ஒரு பங்கு 'சிங்பாஸ்பைடு', 49 பங்கு எண்ணெயில் வறுத்த பொரியில் கலந்து வைத்து எலிகளை அழிக்கலாம்.
பத்து சதவிகிதம் 'போரேட்' குருணை மருந்தை இரண்டரை சதவிகித கிராம் என்ற அளவில் பத்து லிட்டர் நீரில் கலந்து வளைகளில் ஊற்றினால் எலிகள் வராது.
தொடர்புக்கு 95786 69455.
- வெ.ரெங்கசாமி
ஓய்வு உதவி வேளாண் அலுவலர், திருச்சி.

