PUBLISHED ON : பிப் 08, 2017

மத்திய, மாநில அரசு நிதியுடன் நுண்ணீர் பாசனம், தெளிப்பான் இனங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அளவுள்ள பொருட்களுக்கான செலவில் 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. கூடுதலாக போக்குவரத்து செலவினம் மற்றும் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் பொருத்துவதற்கான செலவு தொகை மட்டும் விவசாயிகளிடம் வசூலிக்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படத்துடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நிலத்தின் வரைபடம், மண், தண்ணீர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.
