PUBLISHED ON : பிப் 09, 2011

மஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்: இதுவும் ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு. அவர் தன் பண்ணையில் உள்ள பவர் டில்லருடன் இணைக்கும் வகையில் மஞ்சள் அறுவடை இயந்திரத்தை தயார் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழககத்துடன் பண்ணை இயந்திரவியல் துறையில் ஆலோசனை பெற்றுள்ளார். இயந்திரத்தின் மூலம் ஒரு நாளில் 2 ஏக்கர் அறுவடை செய்ய முடியும் என்கிறார் விவசாயி. இவ்வியந்திரத்தின் அடக்கவிலை ரூ.5000/-. இதனை பயன்படுத்துவதன் மூலம் மஞ்சள் அறுவடைச் செலவு ரூ.7500 ஏக்கருக்கு என்ற அளவில் குறைகிறது என்று தெரிவிக்கிறார் விவசாயி. இதுவரை உழவர்களுக்கு 12 இயந்திரங்களை விற்பனை செய்துள்ளார். தொடர்புக்கு: பி.ராமராஜ், புதுப்பாளையம், செட்டிசமுத்திரம் அஞ்சல், பவானி, ஈரோடு. 98651 71790. (தகவல்: ந.சாத்தையா, பா.கலைச்செல்வன், தி.மனோகரன், வேளாண் அறிவியல் நிலையம், திண்டிவனம், விரிவாக்க கல்வி இயக்ககம், த.வே.பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003)
பண்ணைக்கழிவுகளைத் துளாக்கும் சாதனம்: இது ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு. தன்னுடைய தென்னந்தோப்பில் விழும் பட்டைகளை உரமாக்குவதற்கும் அவற்றை வெட்டி தூளாக்குவதற்கும் மற்றும் வாழைத்தண்டுகளை வெட்டி தூளாக்குவதற்கும் ஏற்பதன் முயற்சியில் 35 குதிரைத்திறன் கொண்ட டிராக்டர் பவரில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் சாதனத்தை உருவாக்கிஉள்ளார். இந்த சாதனத்தில் 6 கடின வெட்டுக் கத்திகள் உந்து சக்தியால் இயக்கப் பட்டு ஈர நிலையில் இருக்கும் கழிவுகளை பொடியாக்குகின்றன. மொத்த எடை 325 கிலோ ஆகும். இதன் பலனாக விவசாயி தன் பண்ணையிலேயே இயற்கை உரம் தயாரிக்க முடிந்தது. மண்புழு உரம் தயாரிப்பதற்கும் இக்கழிவுகள் உகந்தவையாகவும் இருந்ததால் மறுசுழற்சிக்கு மற்ற பண்ணைக்கழிவுகள் தேவைப் படவில்லை என்கிறார் விவசாயி. இச்சாதனத்தின் விலை ரூ.1 லட்சம். தொடர்புக்கு: கே.நடராஜன், உதவிப்பாளையம், பொள்ளாச்சி தாலுகா, கோயம்புத்தூர்.
தென்னையில் ஊடுபயிர் கோகோ: வளர்ந்த தென்னை, பாக்கு, பாமாயில் தோட்டங்களில் ஊடுபயிர் செய்ய ஏற்றது. ஆண்டுதோறும் அதிக பணம் தருவது; நட்ட 3 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை பலன். ஏக்கருக்கு நிகர லாபம் ரூ.24,000/- அரசு மானியம் எக்டருக்கு ரூ.20,000/-. மேலும் விபரங்களுக்கு இலவச தொலைபேசி எண்: 1800 - 103 - 5303. தொலைபேசி எண்: 04253-281 031. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: கேட்பரி இந்தியா லிமிடெட், சென்னக்கல் பாளையம், தலைவாய்பட்டினம், தாராபுரம்-638 672.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
