தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/நவீனதொழில்நுட்பம் - ஆட்டுஎரு உரம்

நவீனதொழில்நுட்பம் - ஆட்டுஎரு உரம்

நவீனதொழில்நுட்பம் - ஆட்டுஎரு உரம்


PUBLISHED ON : அக் 27, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆட்டு எருவில் மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும் சாம்பல்சத்தும் உள்ளது. ஒரு ஆடு ஒரு வருடத்திற்கு 500 கிலோவில்இருந்து 750 கிலோ வரை எரு உற்பத்தி செய்ய வல்லது. 100 ஆடுகள் உள்ள கிடை வைத்தால் ஒரு ஏக்கருக்கு வேண்டிய வளத்தைப்  பெறலாம். ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து குறைந்த தீவனங்களை அளிக்கும்போது எருவில் தழைச்சத்து அளவு குறைந்தே இருக்கும். ஆட்டின் சிறுநீரில் தழைச் சத்தின் அளவு அதிகமாகவும் இருக்கும். புழுக்கையில் நுண்ணூட்டச்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன. எனவே புரதச்சத்து மிக்க  தீவனங்களான குதிரைமசால், முயல்மசால், வேலிமசால், சூபாபுல், தட்டைப்பயறு போன்றவற்றை ஆடுகளுக்கு கொடுத்தால் தழைச் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு ஆட்டு எருவில் அதிகமாக இருக்கும். ஆட்டு எருவில் 60லிருந்து 70 சதம் தண்ணீர் சத்தும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும், 1.7 சதம்  சாம்பல் சத்தும் உள்ளது.

ஆழ்கூள முறை உர உற்பத்தி: இம் முறையில் கொட்டகையின் நிலப் பரப்பிற்கு ஆழ்கூளமாக நிலக் கடலைத் தோல், துண்டிக்கப் பட்ட வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்கழிவு போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆடு ஒன்றுக்கு 7 கிலோ அளவில் ஆழ் கூளத்தை தரையில் பரப்ப வேண்டும். ஆழ்கூளத்தின் அளவு அரை அடி உயரத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். சிறுநீர் ஆழ்கூளத்தால் உறிஞ்சப்படுவதால் சிறுநீரில் இருந்து தழைச்சத்து ஆவியாகி விரயமாவது குறைகிறது. இந்த முறையில் ஆடுகளுக்கு நல்ல ஊட்டச்சத்து மிக்க பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம், தண்ணீர் தேவைக் கேற்ப கொடுப்பதால் ஆடுகள் நன்கு உட்கொண்டு அதிக புழுக்கை மற்றும் சிறுநீரை வெளியிடுகிறது.

ஆழ்கூளத்திலுள்ள ஈரத்தன்மையைப் பொறுத்து 3லிருந்து 4 வருடத்திற்கு ஒரு முறை ஆழ்கூள எருவை எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் பத்து ஆடுகளிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இந்த எருவில் 50 கிலோ பொட்டாஷ் உரத்திலுள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும். ஆட்டுஎருவில் உள்ள தழைச்சத்து மெதுவாக வெளிப்படுவதால் பயிர்களின் தேவைக்கேற்ப தழைச்சத்து சீராக கிடைக்கிறது. ஆனால் ரசாயன உரம் தழைச்சத்தை உடனடியாக வெளியிடுவதால் நிறைய தழைச்சத்து ஆவியாகி விரயமாகிறது.

ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் ஆடுகளிலிருந்து பெறப்படும் எருக்கள் களைகளின் விதைகள் இல்லாமல் இருப்பதால் வேளாண்பயிர் சாகுபடியிலும் களைகள் குறைவாக இருக்கும். வீடுகளில் மண்தொட்டி மற்றும் பாலிதீன் பைகளில் மரக்கன்று கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த ஆழ்கூள எருவைப் பயன்படுத்தி களைகளற்ற நாற்றங்கால் அமைத்து நல்ல தரமான கன்றுகளை உற்பத்தி செய்யலாம்.

ஆழ்கூள உரத்தை நெல், தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களின் நாற்றங்கலில் இட்டு களைகளின் அளவைக் கட்டுப்படுத்தி அதிக லாபம் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us