sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஏப் 18, 2012

Google News

PUBLISHED ON : ஏப் 18, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோரியஸ் கிழங்கு - மருந்து கூர்கன் ஒப்பந்த சாகுபடி திட்டம்: ஓமவல்லி குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைச்செடி. இது நெருக்கமான கிளைகளில் தடிம னான இலைகளுடன் சுமார் 2 அடி உயரம் வரை வளர்கிறது. இச்செடி நுனிக்கொழுந்தைக் கிள்ளி நட்டு வளர்க்கப்படுவதால் ஆணிவேர் உண்டாவதில்லை. அடிக் கணுக்களிலிருந்து பக்க வேர்களே உண்டாகின்றன.

பழுப்புநிற வேர்களிலிருந்து ஒல்லியான கோட் வடிவத்தில் ஒரு அடி நீளம் வரை கிழங்குகள் உருவாகின்றன. ஒரு செடியிலிருந்து அரை கிலோ முதல் 3/4 கிலோ வரை பச்சைக்கிழங்குகள் கிடைக்கின்றன. சுயவளம் மிகுந்த பொலபொலப்பான பூமிகளில் 1 கிலோவும் கிடைக்கிறது.

பாஸ்கோலின் என்ற வேதிப்பொருள் கோலியஸ் கிழங்கில் இருக்கிறது. இது ரத்த அழுத்தத்தைச் சீர்செய்து இதயப்பளுவைக் குறைக்கிறது. ஆஸ்துமா, புற்றுநோய், கிளாகோமா நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் முக்கிய மூலப் பொருளாக செயல்படுகிறது. ஆறே மாதங்களில் அதிக வருமானம் பெறலாம். பருவம்: சிறப்புப்பட்டம் - சித்திரை, வைகாசி, ஆனி. இயல்பு பட்டம் - ஆவணி, புரட்டாசி, ஐப்பசி. சிறப்புபட்டம்-2 - கார்த்திகை, மார்கழி, தை.

செம்மண், சரளை மணல் கலந்த மண், செம்பொறை மண், களியற்ற கரிசல், நல்ல வடிகால் வசதி வேண்டும். நடவு: பாருக்கு பார் 2 அடி, செடிக்கு செடி 1 அடி, அடி யுரம், மேலுரம் சிபாரிசுப்படி 50வது நாள் - கோலியஸ் வளர்ச்சி உரக் கலவை; 100வது நாள் - கோலியஸ் நுண்ணூட்டக் கலவை; 150வது நாள் - கோலியஸ் நுண்ணூட்டக் கலவை 10லி/ஏக்கர்.

நீர் நிர்வாகம்: மாதம் 3 முறை நீர் பாய்ச்ச வேண்டும். சாகுபடி செலவு ரூ.20,000 முதல் 25,000 வரை. மகசூல்: குறைந்தபட்சம் 3-5 டன் முதல் அதிக பட்சம் 8-10 டன் வரை. அறுவடை: நிர்வாகத்தின் களப்பணியாளர் உத்தரவின்பேரில் கிழங்குகளை அறுவடை செய்து நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். கொள்முதல் - நடப்பு ஆண்டில் கோலியஸ் கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.12,000 கொள்முதல் விலை வழங்கப்படும். சாகுபடி விபரங்களுக்கு தொடர்புகொள்ள: வீர.எஸ்.சரவணலிங்கம், திட்ட அதிகாரி, 93675 32887. திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.கே.ராமலிங்கம், 94420 31045, 89256 45009. களப்பணியாளர்கள்: டி.சதீஷ் கண்ணன், 99429 19059. ஏ.வெங்கடேசன் 97889 92322, பி.சவுந்திரபாண்டியன் 99428 59566, எஸ்.வி.எம்.ஏ. கிரீன் பிளாண்டேஷன்ஸ் (பி) லிட், 2/465-2, வேதாத்திரி நகர், திண்டுக்கல்-624 004.


சூரிய மின் உலர் கலன்: பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், காங்கேயம் பகுதிகளில் கொப்பரைத் தேங்காய் காயவைக்க படாதபாடு படுகிறார்கள். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சோலார் டிரையர்.

மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருள் எதுவும் தேவையில்லை. மின்சாரமும் தேவையில்லை.

இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தெர்மல் ஷீட் உதவியுடன் நமது தேவைக் கேற்ப மாட்டுவண்டி கூண்டுபோல் வடிவமைத்து தருகிறது கோவை ரெணி நிறுவனம். இந்த கூண்டிற்கு வெளியே 35 டிகிரி செல்சியஸ் உஷ்ணநிலை நிலவினால் அதே உஷ்ணம் கூண்டிற்குள் ஊடுருவும்போது கூண்டிற்குள் 60 டிகிரி செல்சியஸ் நிலவும். இதனால் கூண்டிற்குள் பரப்பப்பட்டிருக்கும் தேங்காய்த் துண்டுகள் கொப்பரைத் தேங்காய் துண்டுகளாக உலர்கின்றன. இதனால் உலரவைக்கும பணி மிகவும் எளிதாகிறது. இதில் எதை வேண்டுமானாலும் உலரவைக்கலாம்.

12 அடி து 20 அடி என்கிற அளவில் உலர்கலவை அமைக்க ரூ.72,000/- செலவாகிறது. தேங்காய் மற்றும் இதர வேளாண் விளைபொருட்களை உலரவைக்கும்போது 100 சதம் பூஞ்சாண நோய் தாக்குதலின்றி பொருட்கள் கிடைப்பதுடன் 3 நாட்களிலேயே முழுமையாக அவை உலர்ந்துவிடுகின்றன. வேளாண் விளைபொருட்களான திராட்சை, மிளகாய், கறிவேப்பிலை, முருங்கைக்காய், சேமியா, ஜவ்வரிசி, நூடுல்ஸ் போன்றவை காயவைக்கலாம். கோழித்தீவனம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது மிகவும் உபயோகமான உபகரணம். மேலும் விபரங்களுக்கு: ரெணி அக்ரோ அண்ட் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட், 338/3சி3, ஸ்ரீ வெங்கடேஸ்வரா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், எல்லைத்தோட்டம் மெயின்ரோடு, பீளமேடு, கோயம்புத்தூர். 98421 77225, 98420 17714.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us