sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : மே 15, 2013

Google News

PUBLISHED ON : மே 15, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவைக்காய் சாகுபடி: துரிதமாக படர்ந்து வளரக்கூடிய காய்கறியான கோவைக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. சமையலுக்குத்தவிர பச்சைக்காய்கறியாக உண்பதற்கும் வற்றல் போடுவதற்கும் மிகவும் ஏற்றது. பல்லாண்டு பயிரான இது ஆண்டு முழுவதும் விளைச்சலைத் தரக்கூடியது. குளிர் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் 8-9 மாதங்களுக்கு விளையும்.

ரகங்கள்: வணிக ரீதியாக பிரபலமான ரகங்கள் இல்லை. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் ஆணைக்கட்டி என்ற இடத்திலுள்ள கோவைக் கொடியிலிருந்து மரபுவழி தேர்வு செய்யப்பட்ட ஒரு வளர்ப்பு ஆராய்ச்சியில் உள்ளது. இதன் காய் நீண்ட பச்சை நிறத்தில், வெண்மை நிறக் கோடுகளைக் கொண்டதாக சராசரியாக ஒரு எக்டருக்கு 65-70 டன் காய்களை விளைச்சலாக தரவல்லது.

கோவைக்காய் பயிர் ஓரளவு வெப்பம் தாங்கி வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான மண்ணில் நன்கு வளரும். களர் உப்பு நிறைந்த மண்ணில் நன்கு வளர்ந்து விளைச்சலைத் தரக்கூடியது.

இனப்பெருக்கம்: இளந்தண்டிலிருந்து பெறப்பட்ட வெட்டுக்குச்சிகள் மூலம் பொதுவாக இனப்பெருக்கம் செய்யலாம். நன்கு வளர்ந்த தண்டில் பருமனான பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட 20லிருந்து 30 செ.மீ. நீளமும் 1-2 செ.மீ. பருமனும் உள்ள வெட்டுக்குச்சிகளை மேட்டுப் பாத்திகளில் 25 செ.மீ. து 15 செ.மீ. அளவுள்ள பாலிதீன் பைகளில் 1:1:1 என்ற விகிதத்தில் மணி, மணல், மக்கிய தொழு உரம் கலந்து நிரப்பி நடவேண்டும். தினமும் நீர் ஊற்றி பராமரித்தால் 35-40 நாளில் நன்கு வேர் பிடித்துவிடும்.

நடவு: நன்கு வேர் பிடித்த வெட்டுக்குச்சிகளை எடுத்து நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். 2.5 து 2.5 மீட்டர் இடைவெளியில் 2 அடி நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுத்து 15 நாட்கள் சூரிய ஒளி படும்படி வைத்திருக்க வேண்டும். பின்னர் குழி ஒன்றுக்கு மேல் மண், லீ-1 கிலோ மக்கிய தொழு உரம், லீ கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து குழிகளை நிரப்பி நடவேண்டும். கோடைப்பருவம் நீங்கலாக ஆண்டு முழுவதும் கோவைச்செடி நடவு செய்யலாம். எனினும் ஜூன் - ஜூலை நடவுக்கு ஏற்ற பருவமாகும்.

பந்தல் அமைத்தல்: கோவைக்காய் பந்தலில் படரும் பயிர். எனவே கொடி வகைக் காய்கறிகளுக்கு அமைப்பது போல பந்தல் அமைத்தல் மிகவும் அவசியமானது.

பூ, காய் பிடிக்கும் பருவம்: நடவுச்செடி கோவைக்காய் வேர் பிடித்ததிலிருந்து சுமார் 45-50 நாட்களில் பூக்கள் தோன்றி 50 நாட்களில் காய்க்கும் பருவத்திற்கு வரும். காய்கள் மகரந்த சேர்க்கை இல்லாமல் உருவாகும் தன்மையைக் கொண்டது. ஆண்டு முழுவதும் காய்களை அறுவடை செய்வதால் கோவைக்காய் வளர்ச்சிக்கு ஆண்டுக்கு 4 முறை உரமிடுதல் அவசியம். ஒரு எக்டருக்கு 60, 40, 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துள்ள உரங்களை இடவேண்டும். தழை, சாம்பல் சத்தினை நான்குபாகமாக பிரித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை வைக்க வேண்டும். தழைச்சத்தில் நான்கில் ஒரு பகுதியும், மணிச்சத்தினை நடும்பொழுது அடியுரமாகவும் கொடுக்க வேண்டும். மேலும் நுண்ணூட்டச் சத்துக்களை அவ்வப்போது இடுவதன் மூலம் சத்துக்கள் நிறைந்த தரமான காய்களை அதிக அளவில் பெறலாம். சொட்டு நீர் உரப்பாசனம் வழியாகவும் தற்போது கோவைக்காய் பயிரிடப் படுகிறது. சுமார் நான்கு ஐந்து நாட்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்சுதல் நல்லது. சொட்டு நீர்ப்பாசன முறையில் வளர்த்தால் ஒரு நாளைக்கு சுமாராக செடி ஒன்றிற்கு 10 லிட்டர் நீர் கொடுக்கலாம். மண்ணை அவ்வப்போது கொத்திவிடுவதும் களை எடுப்பதும் அவசியம்.

செடியை வடிவமைத்தலும் கவாத்து செய்தலும்: கோவைக்காய் கொடியை தரையிலிருந்து 1.5 - 1.75மீ உயரத்தில் பந்தலில் படரவிட வேண்டும். ஆரம்ப காலங்களில் தரை மட்டத்திலிருந்து பந்தல் உயரம் வரை சணல் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் கயிறு கட்டிவிட்டாலும் பந்தலில் எளிதாக படர்ந்து வளரும். பந்தல் ........ வரை ஒரே தண்டுகளை கொடியாக செல்ல ஏற்றி, பின் பக்கக்கிளைகளை பரப்பிவிடுவதன் மூலம் காய்கள் திடமானதாகவும் எல்லா கணுக்களிலும் வர ஏதுவாகிறது. அதிகப்படியாக வளரும் கிளைகளை வெட்டிவிட வேண்டும். ஒரு ஆண்டு வளர்ச்சி அடைந்ததும் குளிர்காலத்தில் பந்தலை ஒட்டி 1.5 மீட்டர் உயரத்திற்கு நன்கு வளர்ந்த தண்டுகளை வெட்டி கவாத்து செய்ய வேண்டும். பின்னர் உரம் வைத்து நீர் பாய்ச்சினால் நன்கு தழைத்து வளரும்.

செடி நட்ட 50-60 நாட்களில் காய்கறி அறுவடைக்கு வரும். நல்ல பச்சைநிற காய்களை 2 நாட்களுக்கு ஒரு முறை பறிக்கலாம். வருடத்திற்கு ஒரு செடியிலிருந்து 30-40 கிலோ காய்கள் பெறலாம்.

(தகவல்: முனைவர் பி.ஜான்சிராணி,

முனைவர் சி.சிபா, வெ.ராஜ்ஸ்ரீ, காய்கறிப்பயிர் துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-661 1289).

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us