sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : செப் 18, 2013

Google News

PUBLISHED ON : செப் 18, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காய்கறிகள் சாகுபடி: வீரிய ஒட்டு கலப்பின ரகங்களைப் பயன்படுத்துதல்: காய்கறிப்பயிர்களின் உள்ளூர் ரகம் அல்லது நாட்டு ரகங்களைப் பயன்படுத்தும்போது விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும். எனவே வீரிய ஒட்டு ரகம் அல்லது கலப்பின ரகங்களைப் பயன்படுத்தினால் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக மகசூல் பெறலாம்.

விதைநேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 1 கிராம் என்ற அளவில் டிரைகோடெர்மா விரிடி என்ற உயிர் பூஞ்சாணக்கொல்லி மருந்தைக்கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். தக்காளி, மிளகாய், வெண்டை, வெங்காயத்தில் வேர் அழுகல், வாடல், நாற்று அழுகல் நோய்களை இது நன்கு கட்டுப்படுத்தும்.

நாற்றங்கால்: விதைகள் தனித்தனியாக நாற்று அட்டை எனப்படும் பிளாஸ்டிக் குழித்தட்டுகளில் உள்ள குழிகளில் விதைக்கப்பட்டு, சீரான வளர்ச்சியும் நிறைந்த வேர் வளர்ச்சியும் கொண்ட வளமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குழித்தட்டுகளை சுத்தப்படுத்த தாமிர பூசனக்கொல்லிகளைக் கொண்டு கழுவ வேண்டும். வளர்ச்சி ஊடகமாக தென்னை நார்க்கழிவு, தவிடு, கம்போஸ்ட், மணல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

நுண்நீர் பாசனம்: அதிக விளைச்சலுக்கு சொட்டுநீர் பாசனம் சாலச்சிறந்தது. இதில் அதிக நீர்ச்சிக்கனம் ஏற்படுவதோடு களைகளின் தோற்றமும் மிகவும் குறைகிறது. மேலும் உர சத்துக்களையும் பயிர் பாதுகாப்பு பொருட்களையும் சொட்டுநீர் மூலம் பயிர்களுக்கு அளிக்க முடியும். மொத்தத்தில் அதிக நிகரலாபமும், நீர் பயன்பாட்டுத்திறனும் கிடைக்கின்றன. எனவே சொட்டு நீர்ப்பாசனம் காய்கறிப்பயிர்களுக்கு ஒரு சிறந்த முறையாகும்.

உரமிடுதல்: மண்ணின் தன்மை அறிந்து, பயிரின் தேவையையும் அறிந்து சரியான உரங்கள் இடுவது, பயிரின் சரியான தருணத்தில் உரமிடுவது, சரியான முறையில் உரமிடுவது அவசியம். இயற்கை உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், பசுந்தாள் பயிர்கள், ரசாயன உரங்கள், பயிர் சுழற்சிமுறைகள் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து உர நிர்வாகம் செய்வது சிறந்தது.

காய்கறிப் பயிர்களுக்கு நுண்ணூட்டச் சத்தின் தேவை அதிகம். நுண்ணூட்ட குறைபாடு தென்பட்டாலும், உடனடி நிவாரணம் பெற நுண்ணூட்டச் சத்துக்களை நீரில் கரைத்து இலை வழியாகத் தெளிக்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசன முறையில் பரிந்துரைக்கப்பட்ட அளவு உரத்தினை செடியின் பருவம் மற்றும் நாட்களின் அடிப்படையில் பிரித்து அளிக்க வேண்டும். (தகவல்: மு.மணிகண்டன், முனைவர் பி.ஜான்சிராணி, காய்கறிப்பயிர்கள் துறை, தோட்டக் கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-661 1270)

காய்கறி பயிர் - ரகங்கள் - வீரிய ஒட்டு ரகங்கள்

தக்காளி - கோ.1, கோ.2, கோ.3, பி.கே.எம்.1 - கோ.டி.எச்.1, கோ.டி.எச்.2, த.வே.ப.கழக வீரிய ஒட்டு தக்காளி கோ.3

கத்தரி - கோ.1, கோ.2, பி.கே.எம்.1, எம்.டி.யு.1, பாலூர் 1, பி.எல்.ஆர்.2 - கோ.பி.எச்.1,கோ.பி.எச்.2

மிளகாய் - கோ.2 - த.வே.ப.க. வீரிய ஒட்டு மிளகாய் கோ.1

செடி முருங்கை - பி.கே.எம்.1, பி.கே.எம்.2 - ----

சுரைக்காய் - கோ.1, அர்கா பஹால் - கோ.பி.ஜி.எச்.1, பூசா மஞ்சரி, பூசா வீரிய ஒட்டு-2

பாகற்காய் - கோ.1, எம்.டி.யு. (மதுரை)1, ப்ரீத்தி, அர்காஹரீத் - கோ.பி.ஜி.ஓ.எச்.1, பீசா ஒட்டு-2, என்.டி.பி.ஜி.எச்.7

புடலை - கே.1, கோ.2, பி.கே.எம்.1, எம்.டி.யு.1, பி.எல்.ஆர்.1 - ----

பீர்க்கன் - கோ.1, கோ.2, பி.கே.எம்.1 - ----

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்






      Dinamalar
      Follow us