
மானாவாரி பருத்தி சாகுபடி நுட்பங்கள்: புரட்டாசி மாதத்தில் மானாவாரியில் உகந்த பருத்தி ரகங்களை சாகுபடி செய் வதன் மூலம் நல்ல விளைச்சலை பெறலாம். மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மானாவாரி பருத்தி அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. பருவமழை செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் போது மானாவாரி பருத்தி ரகங்களான கே.சி.2, கே.சி.3, என்.வி.பி.ஆர்.2, எஸ்.வி.பி.ஆர்.4 ரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றவை. பருவமழை பின் தங்கி செய்யக்கூடிய தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவாரியான பகுதிகளில் அதிகமான பதத்தில் கருங்கண்ணி பருத்தி ரகங்களான கே-10, கே-11, பி.ஏ.255 சாகுபடி செய்ய ஏற்றவை.
மானாவாரியில் பருத்தி தனிப்பயிராகவோ அல்லது கலப்புப் பயிராகவோ (பயறு, சூரியகாந்தி, மக்காச்சோளம்) சாகுபடி செய்யலாம். தனிப்பயிராக சாகுபடி செய்யும் பொழுது 60 X 3 செ.மீ இடைவெளியிலும், ஊடுபயிராக சாகுபடி செய்யும் பொழுது பருத்தி இணை வரிசையில் 30 செ.மீ இடைவெளியிலும், வரிசை 6 வரிசையில் 60 செ.மீ இடைவெளியிலும் விதைக்கப்படுகிறது.
மானாவாரியில் பெரும்பாலும் முன்பருவ விதைப்பு செய்வது நல்லது. பின்பருவ விதைப்பு செய்வதற்கு விதையை களைப்படுத்துதல் அவசியம் ஆகும். அமில விதை நேர்த்தி செய்து பஞ்சு வைத்த விதையை சமஅளவுள்ள 1 சத புங்கம் இலைகரைசலை 8 மணி நேரம் உலரவைத்து பின்பு நிழலில் உலர்த்த வேண்டும்.
பயிர் இடைவெளி: கே.சி.2, கே.சி.3, கே.10, பி.ஏ. 225, கே.11 - 45 X 15 செ.மீ
என்.பி.வி.ஆர்.2, எஸ்.வி.பி.ஆர்.4 - 60 X 30 செ.மீ
உர அளவு: கே.சி. 2, என்.வி.பி.ஆர்.2, எஸ்.பி.வி. ஆர்.4, கே.சி.3 - 40:20:20 தழை, மணி, சாம்பல் சத்து / எக்டருக்கு
கே.10, கே.11, பி.ஏ.225 (சதுரம்) - 20:0:0 தழை, மணி, சாம்பல்சத்து / எக்டருக்கு
கோடை இதனுக்கு வெளியிடப்பட்டுள்ள என்.வி.பி.ஆர்.2, எஸ்.பி.வி. ஆர்.4 ரகங்கள் மானாவாரியிலும் அதிக விளைச்சலை தருகின்றன. இது மறுதழைவிற்கு ஏற்ற ரகமாக இருப்பதாலும், தத்துப்பூச்சி வைத்தால் வளர்வதிலும், வறட்சியை தாங்கி வளர்வதாலும் மானாவாரிக்கு உகந்த செல்களைக் கண்டறியப்பட்டுள்ளது. கே.சி.3 பருத்தி ரகம் மானாவாரி பகுதிக்கு உகந்ததாக உள்ளது.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: * வேப்பம்புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்.
* அமிலவிதை நேர்த்தி, உயிரியல் விதை நேர்த்தி முறையான டிரைக்கோ யூரியா விரிடி, ஒரு கிலோ விதைக்கு
4 கிராம் கலந்து விதைக்க வேண்டும்.
* ஊடு பயிராக குறுகிய கால பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து தத்துப்பூச்சி தாக்குதலைக் குறைக்கலாம்.
* வரப்பு பயிராக சூரியகாந்தி, ஆமணக்கு, துவரை சாகுபடி செய்து காய்ந்த தாக்குதலை கண்டறிய மக்காச்சோளத்தை வரப்பிலும், வாய்க்காலிலும் விதைத்து நன்மை செய்யும் பூச்சிகளான பொதுவண்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, இலைபேன், அசுவினி ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன.
மானாவாரியில் பின் பட்டத்தில் மழைபெய்யும் பொழுது நாட்டுக் கலப்பையை கொண்டு இடைஉழவு செய்து மண்ணின் ஈரப்பதத்தை காக்க வேண்டும். வறட்சி காலங்களில் 1 சத யூரியாவைத் தெளித்து வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
பூக்கும் கலன்களில் மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது (75-90 நாட்கள்) டி.ஏ.பி. 2 சதக் கரைசலைத் தெளித்து விளைச்சலை அதிகப்படுத்தலாம்.
மானாவாரிப் பகுதிகளுக்கு ஒட்டு ரகங்கள் ஏற்றதல்ல. (தகவல்: முனைவர் மா.ஞானசேகரன், முனைவர் அ.இராமலிங்கம், முனைவர் இரா.தங்க பாண்டியன், முனைவர் ப.அமலா பாலு, பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்- 626 125, தொலைபேசி: 04563 - 260 736)
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

