sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : மார் 05, 2014

Google News

PUBLISHED ON : மார் 05, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வனமர இலைக்கழிவுகளை உரமாக்கும் நுட்பம்: மரப்பயிர் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின், ஆக்ஸின் பலவகை என்சைம்கள், கிரியா ஊக்கிகள், ஹார்மோன்கள், வைட்டமின் சத்துக்கள் ஆகியவை மண்புழு உரங்களில் உள்ளன. மண்புழு கழிவுகளுக்கு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட கழிவுகளான காப்பி செடிகளின் பழத்தோல், தேக்கு, வாகை இலைகள், சொர்க்கமர விதையுரைகள், புங்கன் விதையுரைகள் ஆகியவற்றை மண்புழுவின் மூலம் மக்கும் செல்லாக மண்புழுக் கழிவுகளில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. இக்கழிவுகளில் மக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியவும், காட்டாமணக்கு, சவுக்கு நாற்றுகளில் மக்கிய உரத்தின் தாக்கத்தை கண்டறியவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 'யூட்ரிலஸ் யூஜெனியே' என்ற மண்புழு ரகம் பயன்படுத்தப்பட்டது.

பாரம்பரிய முறையில் மக்குதல் உரத்தயாரிப்பு முறைகளை விட மண்புழுக்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் கழிவுகளை சத்துக்கள் மிகுந்த உரமாக மாற்றலாம் என்பது மக்கும் உர தொழில்நுட்ப ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மக்கிய உரங்களில் சத்துக்கள் வேறுபட்டாலும் பொதுவாக மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகமாக இருப்பதும் பல ஆய்வுகளின் முடிவாகும். தழைச்சத்து மண்புழுக்களால் தயாரிக்கப்பட்ட தேக்கு இலைகளில் அதிகமாகவும், மணிச்சத்தும், சாம்பல் சத்தும், புங்கம் விதை யுரைகளில் அதிகமாகவும் உள்ளன.

காப்பி பழத்தோலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மண்புழு உரத்தில் பாக்டீரியா, பூஞ்சாணம், 'ஆக்டினோமைசீட்ஸ்' அசிட்டோபாக்டர், அசோஸ்பைரில்லம், பேரிங்கியா மணிச்சத்தைக் கரைக்கும் நுண்ணுயிர்கள் அதிகமாக இருப்பதும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. இத்தகைய மண்புழு உரத்தில் ஆக்ஸிஜனேற்ற இறக்க வினைகளில் ஈடுபடும் மண் நுண்ணுயிரின் வினையூக்கி அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது.

வாகை இலைகளின் மூலம் உருவாக்கப்பட்ட மக்கிய உரத்தில் அமிலபாஸ்பேட்ஸ் நொதிப்பொருள் உருவாக்கம் அதிகமாக உள்ளது. காபி பழத்தோல், சொர்க்க மரங்களில் காரபாஸ்பேட்ஸ் நொதிப்பொருள் அதிகளவில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தாவர வளர்ச்சி ஊக்கியான இண்டோல் அசிடிக் அமிலத்தில் அளவு வாகையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மண்புழு உரத்தில் அதிகமாக உள்ளது.

மக்கும் தொழில்நுட்பம் ஆய்வுகளின் மூலம் மண்புழு உரத்தின் மக்கும் தன்மை அதிக அளவில் இருப்பது அறியப்பட்டுள்ளது. மக்கும் விகிதம் தேக்கு இலைகளில் மிகுந்து காணப்படுகிறது. சொர்க்க மரம் காபி பழத்தோலில் மக்கும் நிலை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

காட்டாமணக்கு, சவுக்கு, நாற்றுகளில் மண்புழு உரம், வேர் உட்பூசண நுண்ணுயிரிகளின் கலவைகளின் தாக்கம் பதிவு செய்யப்பட்டது. பல்வேறு ஆய்வுகளின் மூலம் தரமான காட்டாமணக்கு நாற்றுகளை காபி பழத்தோல் மண்புழு உரம் மூலம் உருவாக்கலாம் என்பது தெளிவாகி உள்ளது. சவுக்கைப் பொறுத்தவரையில் தேக்கு இலைகளிலிருந்து பெறப்பட்ட மண்புழு உரமும், வேர் உட்பூசண நுண்ணுயிர்களின் கலவையும் நாற்றுக்களின் வளர்ச்சியை அபரிமிதமாக ஊக்குவித்துள்ளன.

இந்தியாவில் 384 வகையான மண்புழுக்கள் உள்ளன. இவற்றில் 6 வகையான மண்புழுக்கள் மட்டுமே வணிக ரீதியான மண்புழு உரம் தயாரிக்க உகந்தவை. இவை வனங்களில் மண்ணில் இயற்பியல், வேதியியல் தன்மை, ஊட்டச்சத்து சுழற்சி ஆகியவற்றை சீர்செய்து பாதுகாக்கின்றன. (தகவல்: முனைவர் மா.கிருபா, முனைவர் த.கலைச்செல்வி, முனைவர் மீ.திலக், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்-641 301. போன்: 04254 222 010).

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us