sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : மே 14, 2014

Google News

PUBLISHED ON : மே 14, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொட்டாஷ் பாக்டீரியா: பொட்டாசியம் எனப்படும் சாம்பல்சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளாய் பயிர்களுக்கு அளிக்கிறது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகிறது. வேர் உறிஞ்சி சேர்க்கும் நீர், தாது உப்புக்கள் இலை பாகங்களில் சென்று சேருவதற்கும் மேலும் இலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் செடிகளின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும்பங்கு வகிக்கிறது.

பொட்டாசியத்தை கரைக்கவல்ல பாக்டீரியாக்கள் 'சிலிகோ பாக்டீரியா' எனப்படுகின்றன. அதன் ஆற்றலானது களிமண்ணோடு இணைந்து காணப்படுகிறது. சிலிக்கா, அலுமினியம், பொட்டாசியம் ஆகிய அயன்களின் கூட்டுக் கலவைகளிலிருந்து சிலிக்காவை கரைத்து பொட்டாசியத்தை களிமண்ணிலிருந்து விடுவிக்கிறது. அவ்வாறு விடுவிக்கப்படும் பொட்டாசியம் நீரில் கரைந்து செடிகளினால் எளிதில் உட்கொள்ளும் நிலையில் மாற்றப்படுகிறது. பரிமாற்ற நிலையிலுள்ள பொட்டாசியம், இவ்வகை பாக்டீரியாக்களினால் அதிக அளவில் குறுகிய காலத்தில் கரைக்க வழிசெய்கின்றது. பரிமாற்றம் இல்லாத நிலையில் கூறுகளாக விளங்கும் பொட்டாசியம் சில ஆண்டுகளில் இவ்வகை பாக்டீரியாக்களின் ஆக்கிரமிப்பு பரிமாற்ற விலைக்கு மாற்றப்படுகிறது. இச்செயல்கள் பாக்டீரியாவிலிருந்து வெளியாகும் அங்கக அமிலங்கள் பாலிசாக்கரைட் போன்றவையினாலும் நேர்மின் அயன், எதிர்மின் அயனியில் பரிமாற்றங்களிலும் நிகழ்கிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலும் நுண்ணுயிர் துறையில் இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வின் முடிவாக இரண்டு சிறந்த பொட்டாஷ் பாக்டீரியாக்கள் (கே.ஆர்.பி.1 கே.ஆர்.பி.9) கண்டறிந்து, அதன் திறன் ஆராய்ந்து நெற்பயிரில் பரிசோதிக்கப்பட்டது. கே.ஆர்.பி. 1 பேசில்லஸ் பிளக்சிஸ் எனவும், கே.ஆர்.பி.9 பேசில்லஸ் மியூசிலாஜினோசஸ் என்ற பிரிவுகளில் சேர்ந்த இராசிகள் எனவும் கண்டறியப்பட்டது. இந்த இராசிகளை மண்ணில் இட்டும், அதன் பொட்டாசியம் விடுவிக்கும் தன்மை ஆராயப்பட்டது.

மேலும் கே.ஆர்.பி.9 என்றும் இராசியை நெற்பயிரில் விதைநேர்த்தி, நாற்றங்கால் வேர் நனைத்தும் மண்ணில் இட்டும் பரிசோதிக்கப்பட்டது. கே.ஆர். பி.9, 75 சதம் பொட்டாசியம் உரம் இட்ட நெற்பயிரில் ஒரு எக்டருக்கு கே.ஆர்.பி.9 இடாத செடிகளைக் காட்டிலும் 33.6 சதம் நெல் விளைச்சலும், 28.87 சதம் வைக்கோல் விளைச்சலும் அதிகரித்தது என இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டறியப்பட்டது. மேலும் நெற்பயிரில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் அதிகரித்துக் காணப்பட்டது.

நெற்பயிர், பருத்தி, நிலக்கடலை, முட்டைகோஸ், கத்தரிக்காய், வெள்ளரி, சோளம், கோதுமை, வெங்காயம், கரும்பு ஆகிய பயிர்களில் பல இடங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் பேசில்லஸ் மியுசில்லாஜினோசஸ் ராசியைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டதில் அதிக விளைச்சல், பயிர்களின் தரம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்த ராசியானது சாம்பல் சத்து மட்டுமல்லாது மணிச்சத்து, சிலிக்கா போன்ற சத்துக்களையும் கரைக்கக்கூடியதாகும். மேலும் இவை அசோஸ்பைரில்லம் அசட்டோபேக்டர், பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றுடன் கூட்டாக இடும்போது அதன் திறன் மேலும் சிறந்து விளங்குகிறது.

இத்தகைய நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை பயன்படுத்துவதால் நாம் பொட்டாஷ் உரத்தேவையை 25 முதல் 50 சதம் வரை குறைத்து இடலாம். மேலும் இவ்வகை நுண்ணுயிர்கள் இடுவதினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் இயற்கையாக சத்துக்களின் சுழற்சி மற்றும் மண்ணின் விளையும் திறன் மேம்படும்.

தகவல்: முனைவர் இரா.பிருந்தாவதி, முனைவர் க.கோபாலசாமி, நுண்ணுயிரியல் துறை த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641 602. போன்: 0422 - 661 1294.

- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us