sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : செப் 07, 2011

Google News

PUBLISHED ON : செப் 07, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மை நெல் நடவுக்கேற்ற நடவு இயந்திரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செம்மைநெல் நடவு செய்வதற்கான இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட, நமது நாட்டில் கிடைக்கும் யான்ஜி நெல் நடவு இயந்திரத்தில் பற்சக்கரங்களை 24 செ.மீ. பயிருக்கு பயிர் இடைவெளி வரும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நெல் நாற்றை எடுத்து நடவு செய்யும் விரல்கள் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு 1-2 நாற்றுகளை நடவு செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் நடவு செய்யும் இயந்திரம் 24x24 செ.மீ. இடைவெளியில் நாற்றை நடவு செய்யும். ஒருமுறை முன்னோக்கி செல்லும்போது 8 வரிசை நடவு செய்துவிட்டு, திரும்பி அடுத்த சாலில் நடவு செய்யும்போது சதுர முறையில் நடவு செய்யும் இடத்தைக் குறிக்கும் வண்ணம் வரிசைக் குறிகள் இயந்திரத்தின் வலது, இடது திசைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிகளின் குறியீட்டை சரியான இடத்தில் அமைத்து சதுர நடவுமுறை செய்யலாம். நடவு செய்யும்போது இயந்திரத்துடன் நாற்றுக்களை எடுத்துச்செல்லும் வண்ணம் 8 பாய் நாற்றுக்களை வைக்க அமைப்பு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. பாய் நாற்றங்கால் முறையில் சிறிது கவனத்துடன் நாற்றுக்களை பராமரிக்க வேண்டும். ஒரு ஏக்கரில் நடவு செய்ய 2 மணி நேரம் ஆகும்.

செம்மை நெல் சாகுபடிக்கேற்ற அடையாள கைக்கருவி: செம்மை நெல் சாகுபடியில் அதிக இடைவெளியில் சதுரவடிவ நடவுமுறை முக்கியமான கோட்பாடாகும். சதுர நடவில் பயிருக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்கிறது. மேலும் களைக்கருவியை இரண்டு திசைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவான முறை. செம்மை நெல் சாகுபடியில் சதுர நடவை மேற்கொள்ள அடையாளக் குறியிடப்பட்ட கயிறு (25x25செ.மீ.) பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் ஒரே திசையில் மட்டுமே வரிசை நடவு அமைகிறது. இதனால் களைக்கருவியை இரண்டு திசைகளிலும் பயன்படுத்த இயலாததால் பயிரின் தூர்கட்டும் திறன் குறைகிறது. இதைத் தவிர்க்க உருளும் அடையாளக்கருவி (25x25 செ.மீ.) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாளக் கருவியை வயலில் உருட்டும்போது தொடர்ச்சியான சதுர வடிவ அமைப்பை அடையாளத்துடன் ஏற்படுத்துகிறது. குறியீடு உள்ள இடத்தில் நாற்றுக்கள் நடப்படுவதால் சீராகவும், வேகமாகவும் சதுர முறையில் நடவு செய்ய இயலும். (தகவல்: பெ.தனஞ்செழியன், சோ.ரதிக்கண்ணு, அ.சுரேந்திரகுமார், (1) 3, பண்ணை இயந்திரவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. (2) தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர், 99767 72343)

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us