sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சுவைதரும் நம்மூரு பேரீச்சம் பழம்

/

சுவைதரும் நம்மூரு பேரீச்சம் பழம்

சுவைதரும் நம்மூரு பேரீச்சம் பழம்

சுவைதரும் நம்மூரு பேரீச்சம் பழம்


PUBLISHED ON : ஜூலை 30, 2014

Google News

PUBLISHED ON : ஜூலை 30, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலைவனப்பகுதியில் மட்டுமே பேரீச்சம் பழ மரங்கள் பயிரிட முடியும் என்பதை மாற்றி, நம் மண்ணி லும் பலவித தட்பவெட்ப நிலையிலும் பேரீச்சை மர சாகுபடி செய்யலாம் என சாதித்துக்காட்டியுள்ளார், தர்மபுரியை சேர்ந்த நிஜாமுதீன்.

இவரது 'சாலியா நர்சரி' பண்ணையில் 23 ஆண்டுகளாக பேரீச்சை சாகுபடி நடந்து வருகிறது. 32 வகையான பேரீச்சை மரங்கள் உள்ளன. 3 ஏக்கரில் 650 மரங்கள் வளர்க்கப்படுகிறது. உலகிலேயே மிக உயர்ந்த ரக பேரீச்சையான அஜீவா ரகம் இந்த பண்ணையில் தான் உள்ளது. இதன் கன்று ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

திசுமூலம் கன்று வளர்ப்பு: இஸ்ரேல், இங்கிலாந்து நாடுகளிலிருந்து அங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் உள்ள சீதோஷ்ண நிலைக்கேற்ப 3 ஆண்டுகள் கன்று வளர்க்கப்படுகிறது. அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீச்சை கன்றானது இங்குள்ள வெப்பநிலைக்கு தகுந்தாற்போல் இரண்டு ஆண்டுகளுக்கு திசு மூலம் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. பின்னர் இவை நடவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளிலே காய்க்கத் தொடங்குகிறது.

காய்க்கும் அளவு: ஒவ்வொரு கன்றும் 30 கிலோ முதல் 50 கிலோ வரை விளைச்சல் தருகிறது. பரிகனீதி, அஜீவா என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் பரீகனீதி வகை பழம் நன்கு பருமனாகவும், சதைபிடிப்பும், ருசி தன்மையும் கொண்ட உருண்டை வடிவத்தில் காணப்படும். இந்த பேரீச்சம் பழம் தான் தற்போது நடைமுறையில் அதிகமாக விற்பனையில் உள்ளது.

நடவு முறை: ஒரு ஏக்கருக்கு 24ஙீ24 அடிக்கு ஒரு கன்று வீதம் 76 கன்றுகள் நடவேண்டும். ஒவ்வொரு குழியும் 3ஙீ3ஙீ3 அடி அளவில் இருக்க வேண்டும். குழியின் அடிப்பாகத்தில் 1.5 அடி வரை மணல் கலந்த மண்ணும், மேல் பாகத்தில் 1.5 அடியில் மண்ணும் இயற்கை உரங்களும் கலந்து நடவு செய்யலாம். நடவு செய்த ஒரு மாதம் வரை வாரம் இரண்டு முறை கன்றுக்கு 50 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு வாரம் ஒரு முறையும் , மரம் வளர்ந்த பின் 15 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும்.

சொட்டு நீர் பாசனமும் பயன்படுத்தலாம். இவ்வாறு பராமரித்து வந்தால் வறட்சி காலங்களிலும் இது நல்ல பலன் தரும். ஆண்டிற்கு 2 முறை உழவு, 2 முறை உரங்கள் இட வேண்டும். எல்லாவித மண்பாங்கையும் தாங்கி வளரும் மரங்கள் இவை.

90 ஆண்டுகள் வரை நன்கு காய்க்கும். பின் காய்ப்புத்தன்மை குறைந்துவிடும். இதன் ஆயுட்காலம் 150 ஆண்டுகள்.

பழம் அறுவடை: பேரீச்சம்பழம் ஜூன் முதல் செப்டம்பர் வரை அறுவடைக்கு ஏற்ற காலம். தற்போது அறுவடை நடந்து வருகிறது. பேரீச்சை மரம் வளர்ப்பு தொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு நிஜாமுதீனை 98426 60620ல் தொடர்பு கொள்ளலாம்.

-டபிள்யு.எட்வின்,

மதுரை.






      Dinamalar
      Follow us