/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வாழையில் நூற்புழு நோய் எளிதாக கட்டுப்படுத்தலாம்
/
வாழையில் நூற்புழு நோய் எளிதாக கட்டுப்படுத்தலாம்
PUBLISHED ON : ஜன 22, 2025

வாழையில் நுாற்புழு தாக்குதலை கட்டுப் படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் செ.சுதாஷாகூறியதாவது:
வாழை சாகுபடியில், புசேரியம் என அழைக்கப்படும் வாடல் நோய் தாக்குதல் ஏற்படும். இது, மண்ணில் பரவும் ஒரு விதமான பூஞ்சான நோய்.
இந்நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள், மஞ்சள் நிறத்தில் வாடி வதங்கி விடும். வாழை மரத்தின் வேர், தண்டு, கிழங்கு பாதிக்கப்பட்டு, மரம் முழுதும் உலர்ந்து விடும்.
இதை தவிர்க்க, வாழை நடுவதற்கு முன், நன்கு சீவி விட்டு களிமண் குழம்பில் நனைத்து, 'கார்போ புயூரான் 3ஜி' குருணைகளை தெளித்து, சிறிது நேரம் வைத்திருந்த பின், வாழை கருணை நடவு செய்ய வேண்டும்.
இது, பூஞ்சானத்தை கடத்தும் நுாற்புழுக்களை கட்டுப்படுத்தும். மேலும், 20 கிலோ தொழு உரத்துடன்வேப்பம் புண்ணாக்கு, 1 கிலோ சூடோ மோனாஸ் அல்லது பேசில்லஸ் கலந்து,1 ஏக்கர் வாழைக்கு வேரில் போடவேண்டும். மேலும், பூஞ்சான தாக்குதல்அதிகம் இருக்கும்மரங்களுக்கு, கார்பெண்டர்சிம் பூஞ்சானகொல்லியை ஒவ்வொரு மரத்தின் வேரின் அருகிலும் இட வேண்டும்.
இவ்வாறு செய்தால், வாழை சாகுபடியில் வாடல் மற்றும் நுாற்புழு நோய்களை எளிதாககட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு:
-முனைவர், செ.சுதாஷா,திரூர்.
97910 15355