கறவை மாடுகள் சினைத் தருணத்தில் இருக்கும் போது, காலையில் பருவத்துக்கு வந்தால் மாலையிலும், மாலையில் பருவத்துக்கு வந்தால் மறு நாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும். மாதம் ஒரு தடவை குடல் புழு நீக்க மருந்து தர வேண்டும். தீவனம் சரி விகிதத்தில் இருப்பது நல்லது. இதனால் மாடுகளின் கருவுறும் திறன், பாதுகாப்பாக கன்று ஈனுதலுக்கு வழி ஏற்படுத்தும். போதுமான பசுந்தீவனங்களை சினையாக இருக்கும்போது கொடுப்பது கறவை மாடுகளில் கன்று ஈன்றவுடன் நஞ்சுக்கொடி தங்குவதை தவிர்க்க உதவும். கறவை மாடுகள் கன்று ஈன்ற 60 - 90 நாட்களுக்குள் கருவூட்டல் செய்ய வேண்டும். கன்று பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக பால் கறவையை நிறுத்த வேண்டும். இதனால் கறவை மாடுகள் கன்று ஈன்ற பின் விரைவில் சினைப்பருவ சுழற்சிக்கு வரும்.
இவ்வாறான பராமரிப்பு முறைகளினால் அப்புறம் என்ன ஓராண்டுக்கு ஒரு கன்று தான். பால் உற்பத்தி கூடிக்கொண்டே போகும் என்பதும் உறுதி தான்.
தொடர்புக்கு 73580 98090.
- டாக்டர். வி.ராஜேந்திரன். முன்னாள் இணை
இயக்குனர், கால்நடைப் பராமரிப்புத்துறை

