/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
செம்மை நெல் சாகுபடி: கை நிறைய காசு
/
செம்மை நெல் சாகுபடி: கை நிறைய காசு
PUBLISHED ON : ஆக 01, 2018

விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்கில் மானியம், கடனுதவியை வழங்கி வருகிறது.
விவசாயிக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பெரியாறு, வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. பாசன வசதி இல்லாத பகுதியில் கிணற்று பாசனம் மூலமும் நெல் நடவு நடக்கிறது. நெல் சாகுபடியில் பழைய முறையை தவிர்த்து, செம்மை நெல் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட வலியுறுத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் 2018--19ல் 29,200 எக்டேரில் செம்மை நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இதற்காக ஏக்கருக்கு 3 கிலோ விதை நெல் போதுமானது. பாய் நாற்றுகளாக எடுத்து 22.5 மீட்டருக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்யவும். இதில் துார் அதிகம் பிடிப்பதால், கதிர்களும் அதிகம் வளரும்.
சாதாரண நடவு நிலத்தில் 5 மீட்டர் உயரத்தில் தண்ணீர் தேக்க வேண்டும். செம்மை நெல் நிலங்களில் காயும் நிலைக்கு வந்த பின்னர் நீர் விட்டால் போதும்.
இந்நிலத்தில் அதிக களைகள் பிடிக்கும், கோனாவிடார் கருவி மூலம் மண்ணுக்குள் களையை அமுக்கி உரமாக்கலாம்.
இச்சாகுபடி விவசாயிகளுக்கு மானியமும் உண்டு. சாதாரண நடவில் ஏக்கருக்கு 2.5 டன் நெல் அறுவடையாகும். ஆனால் செம்மை நெல்லில் 3.5 டன் வரை கிடைக்கும். செம்மை நெல் சாகுபடியை விரும்பும் விவசாயிகள் உதவி இயக்குனர், அலுவலர்களை அணுகலாம்.
- தனலட்சுமி
துணை இயக்குனர்
மாவட்ட வேளாண்மை அலுவலகம், மதுரை.

