/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நம்மூர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற பாகிஸ்தான் வெள்ளை நிற மல்பெரி
/
நம்மூர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற பாகிஸ்தான் வெள்ளை நிற மல்பெரி
நம்மூர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற பாகிஸ்தான் வெள்ளை நிற மல்பெரி
நம்மூர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற பாகிஸ்தான் வெள்ளை நிற மல்பெரி
PUBLISHED ON : ஜூலை 10, 2024

பாகிஸ்தான் வெள்ளை நிற மல்பெரி பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், பாகிஸ்தான் வெள்ளை நிற மல்பெரி பழ மரம் மாடித் தோட்டத்தில் சாகுபடி செய்துள்ளேன். இது, மாடித் தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.
மல்பெரி பழம் என்றால், ஊதா நிறத்தில் இருக்கும். இந்த பழம் சற்று வித்தியாசமாக இருக்கும். காய் பச்சை நிறத்திலும். பழம் வெள்ளை நிறத்திலும் இருக்கும். வெள்ளை நிறத்தில் இருந்தாலும், பழத்தின் சுவை தேனை போல் இனிப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,89391 88682.