sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பப்பாளி

/

பப்பாளி

பப்பாளி

பப்பாளி


PUBLISHED ON : ஜூன் 15, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 15, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனைத்து நிலத்திலும் பப்பாளி செழிப்பாக வளரக்கூடிய பணப்பயிர். வடிகால் நிலம் இதன் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாகும். முதிர்ந்த பப்பாளி பழங்களில் இருந்து விதைகளை எடுத்து உரியவாறு தோட்டங்களில் விதைத்தால், 30 நாட்களில் முளைத்து வளர்ந்து விடும். மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டியதில்லை. மழை இல்லாத நாட்களில் வாரம் இருமுறை நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.

இயல்பாக நிலத்தின் மண்ணோடு அமைந்துள்ள உரங்களே இவற்றின் வளர்ச்சிக்கு ஏற்புடையதாகின்றன. எனினும் மாட்டுச்சாணம், கோமியம், சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றை சாதாரண இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.

சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ், அமோனியம் சல்பேட் ஆகியவற்றையும் மாதம் ஒரு முறை சேர்த்து வந்தால் ஓர் ஆண்டினுள் அதிகமான பலனை தரும்.

நாடு, ஒட்டுவிவசாயிகள் பலர் தங்களின் தோட்டங்களில் ஊடு பயிராகப் வரப்புகளின் ஓரங்களிலே பயிரிடுகின்றனர். வியாபார நோக்கத்தில் பயிரிடுவோருக்கு நல்ல வருமானம் தரக்கூடிய பணப் பயிராகும். நாட்டு பப்பாளி, வீரிய ஒட்டுரக பப்பாளி என இருவகை உண்டு. நாட்டு பப்பாளி பெரும்பாலும் வியாபார நோக்கில் வளர்ப்பதில்லை. வீடுகளில் மட்டுமே வளர்க்கின்றனர். தைவான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வீரிய ஒட்டுரக பப்பாளி விதைகள் 10 கிராம் ரூ.2700 விலைக்கு வாங்கி பயிரிடுகின்றனர்.

பப்பாளி பயன்: பப்பாளி பழம் சதைப்பற்று மிகுந்த உன்னத ஊட்டச்சத்து நிறைந்த பழம். இதில் ஏ.பி.சி., எனப்படும் உயிர்ச்சத்துக்கள், நார்ச்சத்து, தாது உப்பு, 'ஒமேகா' எனும் கொழுப்பு அமிலமும் உள்ளன. இவை புற்று நோய் வராமல் சரீரத்தை காக்கும்.

பப்பாளி பழத்தை சீவும் பொழுது வெளியேறும் 'பப்பெய்ன்' என்ற திரவம் ஜீரணத்தை எளிதாக்குகின்றது. பிற்பகல் உணவுக்கு பின் தினமும் பப்பாளி பழத்துண்டுகளை ஓரளவு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்படாது. பக்கவாதம் தாக்குதலில் இருந்து தப்பலாம். உடலுக்கு உஷ்ணத்தை அளித்திடும் உன்னதமான பழம். பப்பாளியை பயிரிட்டு கைநிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆலோசனைக்கு வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகலாம்.

- எஸ்.நாகரத்தினம், விருதுநகர்.

முன்னாள் நிர்வாக அலுவலர்,

வாசனை திரவிய வாரியம்






      Dinamalar
      Follow us