/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பாத்திமுறை காராமணி சாகுபடி அதிக வருவாய்க்கு வழி வகுக்கும்
/
பாத்திமுறை காராமணி சாகுபடி அதிக வருவாய்க்கு வழி வகுக்கும்
பாத்திமுறை காராமணி சாகுபடி அதிக வருவாய்க்கு வழி வகுக்கும்
பாத்திமுறை காராமணி சாகுபடி அதிக வருவாய்க்கு வழி வகுக்கும்
PUBLISHED ON : ஏப் 30, 2025

பாத்திமுறை காராமணி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேல்துாளி கிராமத்தைச்சேர்ந்த தொழில் நுட்ப கல்வி படித்த முன்னோடி விவசாயிகே.பிரசாந்த் கூறியதாவது:
எனக்கு சொந்தமான செம்மண் கலந்த சவுடு மண்ணில் காய்கறி, வேர்க்கடலை உள்ளிட்ட விளை பொருட்கள் சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், 20 சென்ட் நிலத்தில், பாத்தி முறையில் காராமணி சாகுபடி செய்துள்ளேன்.நன்றாக வளர்ந்துள்ளன. இது, பிற ரக காராமணி போல இல்லை.
பொரியல் செய்வதற்கு ஏற்ப சதை பற்றுடன் இருக்கக்கூடிய காராமணியாகும். இந்த காராமணி சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
பொதுவாக, காரா மணியை வரப்பு ஓரங்களில் பயிர் பாதுகாப்புக்கு சாகுபடி செய்வர். பிஞ்சு காராமணியாக இருக்கும் போது பொரியலுக்கும். முதிர்வடைந்த பின் பயறு மாற்றி விதை மற்றும் சமையலுக்கு பயன்படுத்துவர்.
நான், காராமணியை காய்கறி சாகுபடி செய்வதை போல சாகுபடி செய்துள்ளேன். முதிர்ந்து விடும் காராமணியை பயறு வகைக்கு தரம்பிரித்துவிற்பனை செய்துவிடலாம்.
காராமணி சாகுபடி பொறுத்தவரையில், பிஞ்சாக இருக்கும் போது காய்கறிக்கும். முதிர்ந்த பின் பயறுக்கும் தரம் பிரித்து இரு விதமான வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: கே.பிரசாந்த்
63691 87589