/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மலை மண்ணின் சீதோஷ்ணத்தை தாங்கி வளரும் பேரிக்காய்
/
மலை மண்ணின் சீதோஷ்ணத்தை தாங்கி வளரும் பேரிக்காய்
PUBLISHED ON : மே 14, 2025

பேரிக்காய் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொத்துார்கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகே.வெங்கடபதிகூறியதாவது:
மலை மண் சார்ந்த செம்மண் நிலத்தில், குளிர் பிரதேசங்களில் விளையும் பழ வகைகைளை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், ஊட்டி, கொடைக்கானல், தேனி போன்ற குளிர் பிரதேசங்களில் விளையும் பேரிக்காய் சாகுபடி செய்துவருகிறேன்.
இது, நம்மூர் மலை மண்ணின் சீதோஷ்ணநிலைகளை தாங்கி வளர்கிறது. ஒட்டுச் செடியாகஇருப்பதால், இரு ஆண்டுகளுக்குள்மகசூல் கொடுக்க துவங்கி விடும்.
அதன்பின் தான், எவ்வளவு மகசூல் மற்றும் வருவாய் கிடைக்கும் விதம் குறித்து தெரிய வரும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு:கே.வெங்கடபதி,
93829 61000.