/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கத்தரி காய்த்துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் வழிகள்
/
கத்தரி காய்த்துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் வழிகள்
கத்தரி காய்த்துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் வழிகள்
கத்தரி காய்த்துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் வழிகள்
PUBLISHED ON : பிப் 14, 2018

கத்தரியில் காய்த்துளைப்பான் நோயின் அறிகுறிகளாக இளம் குருத்து, நடுக் குருத்து வாடிக் காணப்படும். குருத்து மற்றும் காய்களை துளைத்து அதனுள் உள்ள திசுக்களை உண்டு கழிவை துளைக்கு வெளியே தள்ளும். மொக்கு மற்றும் சிறு காய்கள் உதிர்ந்து விடும். இலைகள் வாடி, காய்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
பாதிக்கப்பட்ட இளங்குருத்து அல்லது நுனித்தண்டுகளை சேகரித்து அழிக்கவும். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக கத்தரி பயிரிடுவதை தவிர்க்கவும். ஒரு எக்டேருக்கு 12 இனக்கவர்ச்சி பொறி அமைக்கவும். செயற்கை பயிரித்திரைடு உபயோகிப்பதை தவிர்க்கவும். காய் முதிர்ச்சி மற்றும் அறுவடை நேரங்களில் பூச்சிக்கொல்லி உபயோகிப்பதை தவிர்க்கவும். வேப்பம் கொட்டை வடிநீர் ஐந்து சதவிகிதம் தெளிக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை நடவு செய்த ஒரு மாதத்திற்கு பின் 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
மருந்து கரைசல் இரைசல் இலைகளில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான் போன்ற திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு அரை மில்லி வீதம் சோர்த்து கலக்கி கொண்டு பயன்படுத்த வேண்டும்.
- முனைவர் ம.குணசேகரன்
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம் ஸ்ரீவில்லிபுத்துார்.