sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நெல் விதைநேர்த்தி

/

நெல் விதைநேர்த்தி

நெல் விதைநேர்த்தி

நெல் விதைநேர்த்தி


PUBLISHED ON : மே 01, 2013

Google News

PUBLISHED ON : மே 01, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல் விவசாயி எ.எஸ். தர்மராஜன் நெல் விவசாயத்தில் பாரம்பரிய முறைகளை அனுசரிப்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர். இன்று நெல் விவசாயம் செய்பவர்கள் பலருக்கு இவரை நன்றாகத் தெரியும். தற்போது நெல் விதை நேர்த்தியை செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார். இவர் பல நெல் ரகங்களை சாகுபடி செய்து பயன் அடைந்து விவசாயிகளுக்கு சிபாரிசு செய்துள்ளார். அவர் விதை நேர்த்தியில் தனக்குத் தெரிந்த விஞ்ஞானத்தை விளக்கு கிறார். அதோடு அமாவாசை வேளையில் நெல் விதைப்பினை எப்படி செய்யலாம் என்று யோசனைகள் தெரிவிக்கின்றார்.

தற்போது பாரம்பரிய நெல் விதை நேர்த்தியைப் பார்ப்போம். 30 கிலோ நெல் விதையை ஒரு பாத்திரம் அல்லது டிரம்மில் 18 மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும். அதன் பிறகு ஒரு சாக்கை எடுத்து ஒரு கிலோ வீதம் வாதநாராயணன் மற்றும் குப்பைமேனி இலைகளை சாக்கின் அடியில் பரப்பவும். இந்த அடுக்கின் மேல் காய்ந்த பசுமாட்டு சாணத்தை பரப்பவும். ஊறவைத்த நெல்லை இதன்மேல் கொட்டவும். சாக்கில் நான்கில் மூன்று பகுதி அளவு வரை நெல்லை நிரப்பி, இந்த நெல் விதைகளுக்கு மேல் மீண்டும் காய்ந்த சாணத்தை வைக்க வேண் டும். இதற்கு மேல் மீண்டும் ஒரு முறை ஏற்கனவே சாக்கின் அடிப் பகுதியில்இட்டதுபோலஒருகிலோ வீதம் வாதநாராயணன் மற்றும் குப்பைமேனி இலைகளை பரப்ப வேண்டும். அதன்பிறகு சாக்கை மூடி கயிற்றில் கட்டி பாரம் வைத்து 24 மணி நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும். அதன்பிறகு சாக்கை அவிழ்த்து முளை விட்டிருக்கும் நெல் விதைகளை எடுத்து நமது தேவைக்கு ஏற்றவாறு நாற்றங்காலில் விதைக்கலாம். இம்

முறையை பின்பற்றுவதால் நாம் வழக்கமாக விதை நேர்த்தி செய்து விதைக்கப்பட்ட நெல்லைவிட நெல் விதைகள் விரைவாக, அதிகமாக முளைப்பது மட்டுமன்றி செம்புள்ளி நோயை எதிர்த்து வளரும் திறனுடையதாகவும் அமைகிறது. மேலும் இம்

முறைப்படி விதைநேர்த்தி செய்யப் பட்ட நெல் பயிரிலிருந்து அதிக அளவு நெல்மணிகள் கிடைக்கின் றன. இவ்விதைநேர்த்தி செய்யப் பட்ட நெல் பயிரிலிருந்தும் இம்முறை விதைநேர்த்தி செய்யப்படாத வெள்ளைப் பொன்னி நெற்பயிரிலிருந்தும் கிடைத்த நெல்மணிகளை ஆய்வு செய்ததில் இம் முறைப்படி விதைநேர்த்தி செய்யப் பட்ட நெற்கதிரில் 250க்கு மேல் நெல்மணிகள் உண்டாகி இருந்தது. பொதுவாக வெள்ளைப்பொன்னியில் ஒரு கதிரில் 145 நெல் மணிகள் மட்டுமே பிடித்திருக்கும்.

நெல் விவசாயத்தில் அமாவாசை நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறார். அமாவாசைக்கு 48 மணி நேரம் முன்பு விதைப்பு செய்தல் மிகவும் முக்கியமானது. பூமிக்கு அருகில் உள்ள நிலா நாள் விதைப்பதைத் தவிர்க்க வேண்டும். பூமிக்குத் தொலைவில் உள்ள நிலா நாள் விதைப்பது மிகவும் நல்லது.

-எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us