/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சவுடு மண்ணிலும் வளரும் புனே ரக சப்போட்டா
/
சவுடு மண்ணிலும் வளரும் புனே ரக சப்போட்டா
PUBLISHED ON : நவ 13, 2024

புனே ரக சப்போட்டா சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி முன்னோடி விவசாயி பி.மாதவி கூறியதாவது:
சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், புனே ரக சப்போட்டா சாகுபடி செய்துள்ளேன்.
இது, நம்மூர் சவுடு மண்ணுக்கு அருமையாக வளர்கிறது. இந்த சப்போட்டா உருளை வடிவத்தில், இனிப்பாக இருக்கும். துவக்கத்தில், குறைந்த மகசூல் கிடைக்கும். மரம் வளர வளர அதிக மகசூல் எடுக்க முடியும்.
குறிப்பாக, சப்போட்டா அறுவடைக்கு பின், இயற்கை உரம் மற்றும் நீர் நிர்வாகத்தை பொறுத்து, அடுத்த காய் பிடிக்கும் போது, கூடுதல் மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.மாதவி, 97910 82317.