sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வயல் எலிகளை கட்டுப்படுத்த எளிய வழிகள்

/

வயல் எலிகளை கட்டுப்படுத்த எளிய வழிகள்

வயல் எலிகளை கட்டுப்படுத்த எளிய வழிகள்

வயல் எலிகளை கட்டுப்படுத்த எளிய வழிகள்


PUBLISHED ON : ஜூலை 17, 2019

Google News

PUBLISHED ON : ஜூலை 17, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயல் வெளிகளில் பயிர்களை பல வகையான பூச்சிகளும், நோய்களும் பல பருவங்களில் தாக்கி சேதம் விளைவித்தாலும், எலிகள் பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையிலும், அதற்கு முன்னரும் சேதப்படுத்தி பெரும் பொருளாதார இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும். எலிகள் இந்திய மக்கள் தொகையைப் போல் ஆறு மடங்கு அதிகம் உள்ளதால் மிக அதிகமான சேதம் விளைவிக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம்.

வயல் வெளிகளில் அதிக தண்ணீர்; பாய்ச்சி வளைக்குள் இருக்கும் எலிகளை மூச்சுத் திணறச் செய்து கொல்லலாம். தங்க அரளிச்செடியின் கிளைகளை வெட்டி வயல் வெளியைச் சுற்றிலும் போட்டு வைத்தால் எலிகள் வராது. வயலைச் சுற்றிலும் நொச்சி மற்றும் எருக்கு ஆகிய இரு செடிகளையும் மிக நெருக்கமாக நட்டு வளர்த்து உயிர் வேலி அமைத்தால் எலிகளின் நடமாட்டத்தை ஒரு வயலில் இருந்து மறுவயலுக்கு செல்வதைக் குறைக்கலாம். ஆந்தைகள் மற்றும் பருந்துகள் வயல்களில் உள்ள எலிகளைப் பிடித்து உண்பதற்கு வசதியாக 'டி' வடிவ குச்சிகளை நட்டு வைக்க வேண்டும்.

நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள வயலில் ஏந்தப்பனை அல்லது சாலானை அல்லது காட்டுத்துவை என்று சொல்லக்கூடிய பனையின் இலைகளையும், ஆண் பூக்களையும் சிறு, சிறு துண்டுகளாக்கி ஆங்காங்கே போட்டு வைத்தால் அப்பூவிலிருந்து வரும் கெட்ட வாசனையால் எலிகள் அவ்வயலை விட்டு ஓடி விடும்.

பெரிய உருளை வடிவ மண்பானைகளை வயலில் தரை தளத்திற்கு குழி தோண்டி புதைத்து பாதி மண்பாணைக்கு களிமண்ணை நிரப்பி அதன் மேல் எலிகளைக் கவர தேங்காய் சிரட்டையை வைக்க வேண்டும். இதனால் கவரப்படும் எலிகள் மண்பானையில் உள்ள களிமண்ணில் விழுந்து மேலே வரமுடியாமல் இறந்து விடும்.

பனை மரத்தின் காய்ந்த இலைகளை ஒரு குச்சியில் கட்டி வயலில் ஆங்காங்கு வைத்தால், காற்றிற்கு அவை அசையும் போது உருவாகும் சத்தம் எலிகளை விரட்டும்.

பசுஞ்சாணத்தை வயல்களிலும், வரப்புகளிலும் போட்டு வைப்பதால் எலிகளின் நடமாட்டத்தைக் குறைக்கலாம். தஞ்சாவூர் மூங்கில் பொறி, வில் பொறி மற்றும் பானை பொறி ஆகியவற்றில் வறுத்த நிலக்கடலை அல்லது தேங்காய் ஆகியவற்றை வைத்து எலிகளைக் கவர்ந்திழுத்து அழிக்கலாம்.

பயிர்; அறுவடை முடிந்தவுடன் ஆழமாக உழுவதன் மூலமும் எலி வளைகளை வெட்டி எடுப்பதன் மூலமும் எலிகளை அழிக்கலாம். இறுதியாக எலித்தொல்லை மிக அதிகமாக இருப்பின் ப்ரோமடியலோன் என்ற எலிக்கொல்லியைப் பயன்படுத்தி எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.

- மா.விஷ்ணுப்பிரியா, உதவி பேராசிரியை

சேதுபாஸ்கரா கல்லுாரி, காரைக்குடி.

94425 42476






      Dinamalar
      Follow us