
நெருப்புக்கோழி: பறக்காத பறவைகளில் நெருப்புக்கோழி, ஈமு கோழி, ரியா பறவை, கேசாவாரி பறவை, கிவி பறவை ஆகியவை அடங்கும். இவைகளில் மிகச்சிறிய பறவை நெருப்புக்கோழி. பின்னோக்கிச் சென்று பறக்கும் மிகச்சிறிய ஹம்மிங் பறவை முதல் 120 கிலோவிற்கும் மேலாக எடை கொண்ட நெருப்புக்கோழி வரை ஒவ்வொரு பறவையும் வினோத பறவைதான்.
உலகில் சற்றொப்ப 20 லட்சம் நெருப்புக்கோழிகள் உள்ளது. வியாபார ரீதியில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப் படுகிறது. இதன் கால்களம் கழுத்தும் நீளமானதாக இருக்கும். ஆண் பறவை 7 அடி உயரமும் பெண்பறவை 6 அடி உயரமும் இருக்கும். 70 ஆண்டுகள் வரை உயிர்வாழும். இதன் வலிமையான காலில் 2 விரல்கள் முன்னோக்கி இருக்கும். உள்நோக்கிய பெரிய விரலில்2 அங்குல நீளத்திற்கு கூர்மையான நகம் உண்டு. மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. 30 நிமிடம் அதே வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. பற்கள் இல்லாததால் தீவனத்தை முழுவதுமாக உண்ணும். சிறிய கூழாங்கற்களையும் விழுங்கி வயிற்றில் வைத்துக்கொள்ளும். தீவனத்தை அரைக்க இது உதவுவதோடு ஓடும்போது உடலை தேவையான திசையில் திருப்பிக் கொள்வதற்கும் உதவுகிறது.
வருடத்திற்கு சுமார் 40 முட்டைகள் இடும். முட்டை எடை சுமார் 1200 கிராம் முதல் 1500 கிராம் வரை இருக்கும். முட்டை பொரிக்கும் காலம் 42 நாட்கள். ஒரு பொதுவான முட்டைக்குழியில் முட்டைகளை இட்டு அடைகாக்கும். பகலில் பெட்டையும் இரவில் ஆண் நெருப்புக்கோழியும் முட்டையை அடைகாக்கும். தாவரங்கள், சிறு மரங்களின் வேர்கள், விதைகள், பூச்சிகள், பல்லிகள் போன்றவற்றை உண்ணும்.
தமிழகத்தில் சென்னை அருகில் காட்டுப்பாக்கத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் நெருப்புக்கோழிகள் வளர்க்கப் படுகின்றன. நெருப்புக்கோழி இறைச்சியில் கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் எரிசக்தியின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. நெருப்புக்கோழி சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நேசப் பறவையாகக் கருதப்படுகிறது. சில உயிரியல் பூங்காக்களில் நெருப்புக்கோழியின் முதுகில் அமர்ந்து சவாரிசெய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. (தகவல்: தா.லூர்து நித்தா, ம.பாபு, பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன், கால்நடைப் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மையம், புதுக்கோட்டை, கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி)
அறுவடைக்குப்பின் சரியான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வாழையின் வாழ்நாளை அதிகரித்து நீண்டதூரத்திற்கு எடுத்துச் செல்லமுடியும். ஏற்றுமதி செய்யும்போது பழங்களுக்கு சேதம் விளைவிக்கா வண்ணம் மேடு பள்ளங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட அட்டைப் பெட்டிகளில் அடைத்து அனுப்ப வேண்டும். இந்தப் பெட்டிகள்
57 x 30 x 22.5 செ.மீ. அளவு
உடையது. இதில் 1.3 செ.மீ. விட்டமுடைய 10 சிறு குழிகள் இருக்கும். இதில் வாழைச் சீப்புகளை அதன் அடிப்பாகம் கீழிருக்குமாறும் காய்கள் மேல்நோக்கி இருக்குமாறும் நீளவாக்கில் அடுக்க வேண்டும். இவற்றை புகைவண்டியில் அனுப்பும்போது ஒன்றன்மேல் ஒன்றாக பெட்டிகள் இருக்குமாறு அடுக்க வேண்டும். 10 டன் கொள்ளளவுள்ள பெட்டியில் 100 வாழைப் பெட்டிகளை 350 வரை அடுக்க முடியும்.
வாழைப்பழங்களை 13 டிகிரி செல்சியசுக்கு கீழ் உள்ள வெப்பநிலையில் வைத்து சேமிக்கும் போது அவற்றின் தோலில் கறுப்புநிற புள்ளிகள் தோன்றும். இக்குறைபாடுடைய பழங்கள் பழுத்தபின் அதன் தோல் கடினமாக இருக்கும். மேலும் இப்பழங்கள் எளிதில் பூஞ்சான நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எனவே இந்த வெப்பநிலை பழங்கள் சேமிக்க உகந்ததல்ல.
ரொபஸ்டா மற்றும் குள்ள வாழைத்தாரின் முக்கால் பாகம் விளைச்சலின்போது (பூத்த 100 நாட்களுக்குப் பின்) வெட்டி முன் சேமிப்பு நேர்த்திக்காக 1000 பி.பி.எம். தலோபெண்டசோல் என்ற மருந்தில் தாரிலிருந்து எடுக்கப்பட்ட சீப்ப்புகளை நனைத்து சேமிக்க வேண்டும். அவ்வாறு சேமிக்கும்போது தார்கள் அதிகபட்சமாக 28 நாட்கள் 13 - 15டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எந்தவித சேதம் இல்லாமல் சேமிக்க முடியும். 13லிருந்து 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் 80-90 சதம் காற்றின் ஈரப்பதமும் பழங்களை சேமிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையாகும். வெப்பநிலை அதிகரிப்பதால் பழங்கள் விரைந்து பழுத்துவிடுகின்றன. (தகவல்: த.நா.பாலமோகன், ஜெ.அக்னிலியா, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்)
-டாக்டர்கு.சௌந்தரபாண்டியன்

