PUBLISHED ON : செப் 19, 2012

காரமான மிளகிற்கு வேம் உரம்:
காரமான மிளகினை உற்பத்தி செய்ய பல வகையான ஊட்டச்சத்துக்களை நிலைநிறுத்தும் ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து தாவரங்களின் வேர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு, மாறறக்கூடிய நுண்ணுயிர் உரமான ''வேம்'' வேர் உட்பூசணம் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் அவற்றின் செயல் திறன், பயிரின் வளர்ச்சி, இனப்பெருக்கத்தின் மூலம் அறியப்பட்டுள்ளது. எனவே மிளகுப்பயிரின் வளர்ச்சி, விளைச்சலை அதிகரிக்க மண்ணில் உள்ள மணி, சாம்பல் சத்தைக் கரைத்து பயிர்களுக்கு வழங்கு கின்ற வேர் உட் பூசணத்தை மிளகுக் கொடி நடும்போது ஒரு கொடிக்கு 10 கிராம் இட்டும், காய்க்கின்ற தருணத்தில் ஒரு கொடிக்கு 100 கிராம் வீதம் வேரின் அடிப் பகுதியில் வட்டவடிவ குழி எடுத்து இடுவதன்மூலம் தரமான, காரமான மிளகு விதையினை அறுவடை செய்யலாம். வேர் உட்பூசணம் தன்னுடைய நூலிழை போன்ற அமைப்பின் மூலம் பரவி மணிச்ததினை கிரகித்து பயிர்களுக்கு அளிக்கின்றது. வேர்கள் நன்கு வளர்வதால் பயிர்களின் நீர் உறிஞ்சும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. செடிகளுக்கு வறட்சியை ஓரளவிற்கு தாங்கும் சக்தியைக் கொடுக்கிறது. எளிதான முறையில் செம்பு, துத்தநாக நுண்ணூட்டச் சத்துக்களை செடிகளுக்கு அளிக்கிறது. வேர் உட் பூசணம் இடுவதன்மூலம் 20-25 சதவீத மணிச்சத்து இடுவதைக் குறைக்கலாம். வேர் உட்பூசணம் பயிர் வேர்ப்பகுதியில் வாழ்வதால் நோயை உண்டாக்கும் நுண்ணுயிர்கள் தாக்குதலிலிருந்து பயிரைக் காக்கிறது. மண்ணின் வளமும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.கறிவேப்பிலையின் மகத்துவம்:
கறிவேப்பிலையின் மருத்துவ குணம் வெளிவரத் தொடங்கியது முதல் கறிவேப்பிலை வணிக ரீதியாக முக்கியத்துவம் பெற்று வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலை உருவாகியுள்ளது. கறிவேப்பிலையில் வைட்டமின் 'ஏ' உள்ளது. இது முடிவளர்ச்சிக்கு நல்லது. குறிப்பாக இளநரைக்கு சிறந்தது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்திக்கு ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இதனை சட்னி, இட்லிப்பொடி ஆகியவற்றில் பயன்படுத்தினால் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் அடர்த்தியான கருமையான முடிவளர்ச்சி இருக்கும்.வெண்புள்ளி நோய் தீர்க்கும் கறிவேப்பிலை:
ஹேமா என்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்த பெண்ணிற்கு சிறு வயதிலிருந்து காலில் சிறு வெண்புள்ளிகள் இருந்தது. அது நாளடைவில் உடலெங்கும் பரவியது. ஹேமாவின் 24வது வயதில் திருமணமாகி, ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதிகப்படியான மருந்துகளை உட்கொண்டதால் சிறுநீரகம், இதயம், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆங்கில மருத்துவத்தை நிறுத்திக்கொண்டார்.
ஒரு நாள் ஒரு சித்த வைத்தியரைச் சந்தித்த ஹேமா, தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை ஒரு கைப்பிடியும், கீழாநெல்லி ஒரு கைப்பிடியும் மென்று விழுங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டார். நிறைய தண்ணீர் குடிக்கவும் உணவைக் குறைத்து பலவிதமான பழங்களையும் சாப்பிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தவிர்க்க வேண்டிய ஒரே பொருள் வெள்ளைச் சர்க்கரை. இதைத் துளிகூட சேர்க்கக்கூடாது என்றார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் சாப்பிட்ட ஹேமாவின் வெண்புள்ளிகள் மறைந்தன. ஒரு மாதம் சாப்பிடாமல் ஒரு பத்துநாள் இடைவெளிவிட்டு உட்கொண்டுள்ளார். இத்தனை மேன்மையுடைய கறிவேப்பிலையை மருந்தாக பயன்படுத்தலாம். இயற்கை முறை விவசாயம் செய்து ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் கறிவேப்பிலை உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்